Close Menu
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
What's Hot

ஒவ்வொரு குடும்பத்தையும் காப்பாற்றும் குலதெய்வம்..! வழிபடும் முறைகளும், பயன்களும்..!

இன்றைய (23.07.2026) ராசிபலன் – மேஷம்

இன்றைய (23.07.2026) ராசிபலன் – ரிஷபம்

Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram YouTube RSS
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
KoilgalKoilgal
Home»Featured»“40 தொகுதிகள் கேட்கவும் எங்களுக்கு உரிமை உண்டு” – முட்டிப் பார்க்கும் மு.வீரபாண்டியன்
Featured

“40 தொகுதிகள் கேட்கவும் எங்களுக்கு உரிமை உண்டு” – முட்டிப் பார்க்கும் மு.வீரபாண்டியன்

Editor TN TalksBy Editor TN TalksDecember 20, 2025Updated:December 20, 2025No Comments1 Min Read
Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
Follow Us
Facebook X (Twitter) Instagram YouTube
cpi communist
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

திமுக கூட்டணியில் 40 தொகுதிகள் கேட்கவும் தங்களுக்கு உரிமை உண்டு என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.

திருச்சியில் அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அக்கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தவெக தலைவர் விஜய், திமுக-வை தீய சக்தி என்று ஒன்றுக்கு பலமுறை கூறுகிறார். அவரது கருத்தை கூட்டணி கட்சி என்கிற முறையிலும், ஒரு பொறுப்பு வாய்ந்த அரசியல் கட்சி என்கிற முறையிலும் நாங்கள் நிராகரிக்கிறோம்.

சாதி, மத ரீதியில் நாட்டைப் பிளவுபடுத்துகிற, மக்களின் வளமையான வாழ்வை கேள்விக்குறியாக்கும் கருத்தியல் சித்தாந்தங்கள் கொண்டவர்கள் தான் தீய சக்தி. விஜய்யிடம் நல்ல திட்டங்களை, கொள்கைகளை, புதிய சிந்தனைகளை எதிர்பார்த்தோம். ஆனால், அப்படி எதுவுமில்லாதது ஏமாற்றம் அளிக்கிறது.

ஜன.5-ல், காலிப் பணியிடங்களை நிரப்பக்கோரி மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் ரயில் நிலையங்கள் முன்பு நடைபெறவிருக்கும் மறியல் போராட்டத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரிக்கிறது. வரும் 26-ம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு மற்றும் நல்லகண்ணு நூற்றாண்டு விழா நிகழ்ச்சி நடைபெற உள்ளது. பிப். 7-ம் தேதி கட்சியின் நூற்றாண்டு நிறைவு விழா சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற உள்ளது. அதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.

பொங்கல் பண்டிகைக்கு நிதி நிலைமைக்கு ஏற்ப மக்களுக்கு பணம் வழங்க வேண்டும். தமிழக அரசால் முடியவில்லை என்றால் மத்திய அரசு தர வேண்டும். கூட்டணியில் 30, 40 தொகுதிகளை கேட்க எங்களுக்கு தார்மிக உரிமை உண்டு.

எத்தனை தொகுதிகள் கேட்டாலும் அதை ஜனநாயக விரோதமாக முதல்வர் எடுத்துக் கொள்ளமாட்டார். ஆனால் சூழலுக்கு ஏற்ப முடிவெடுப்போம்; வெற்றி பெறுவோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
Previous Article“100 நாள் வேலை திட்டத்தை ஒழிப்பதே பாஜகவின் குறிக்கோள்” – திருமாவளவன் தாக்கு
Next Article புதுப் புது அடிமைகளை தேடுகிறது பாஜக – உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்
Editor TN Talks

Related Posts

ஒவ்வொரு குடும்பத்தையும் காப்பாற்றும் குலதெய்வம்..! வழிபடும் முறைகளும், பயன்களும்..!

July 23, 2026

இன்றைய (23.07.2026) ராசிபலன் – மேஷம்

July 23, 2026

இன்றைய (23.07.2026) ராசிபலன் – ரிஷபம்

July 23, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Ads
ADS
Latest Posts

ஒவ்வொரு குடும்பத்தையும் காப்பாற்றும் குலதெய்வம்..! வழிபடும் முறைகளும், பயன்களும்..!

இன்றைய (23.07.2026) ராசிபலன் – மேஷம்

இன்றைய (23.07.2026) ராசிபலன் – ரிஷபம்

இன்றைய (23.07.2026) ராசிபலன் – மிதுனம்

இன்றைய (23.07.2026) ராசிபலன் – கடகம்

Trending Posts

இன்றைய (23.07.2026) ராசிபலன் – மீனம்

July 23, 2026

ஒவ்வொரு குடும்பத்தையும் காப்பாற்றும் குலதெய்வம்..! வழிபடும் முறைகளும், பயன்களும்..!

July 23, 2026

இன்றைய (23.07.2026) ராசிபலன் – தனுசு

July 23, 2026

இன்றைய (23.07.2026) ராசிபலன் – மகரம்

July 23, 2026

இன்றைய (23.07.2026) ராசிபலன் – கும்பம்

July 23, 2026
Facebook X (Twitter) Instagram YouTube RSS
  • Home
  • About us
  • Privacy Policy
  • Contact us
© 2026 TN Talks.

Type above and press Enter to search. Press Esc to cancel.