வட இந்தியாவில் பல்வேறு இடங்களில் பல சிறப்பு தினங்கள் மற்றும் நாட்கள் வழிபடப் படுகிறது. அந்த வகையில், இந்து மத நம்பிக்கையில் கங்கை நதி சொர்க்கத்தில் இருந்து பூமிக்கு இறங்கி வந்த நாள் கங்கா தசராவாக கொண்டாப்படுகிறது.

நடப்பாண்டில் இந்த விழா நேற்று ( 25.05.2026) தொடங்கியது. அரும் 28-ம் தேதி வரை இவ்விழா கொண்டாட்டங்கள் நடைபெறும். இந்த புனித விழாவை ஒட்டி கங்கை மற்றும் அதன் கிளை நதியை ஒட்டிய புனித தளங்களில் மக்கள் வழிபாடு செய்து புனித நீராடுகின்றனர். அந்த வகையில்,

உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் காலையிலேயே ஏராளமான பக்தர்கள் திரண்டு நீராடி சாமி தரிசனம் செய்தனர். புத்வ மங்கல் எனப்படும் புனித செவ்வாய்க்கிழமையை ஒட்டி, திரிவேணி சங்கமத்தின் அருகே அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க லேதே கோயிலில் அனுமனை வழிபட்டனர்.

Share.
Leave A Reply

Exit mobile version