Close Menu
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
What's Hot

இன்றைய (23.07.2026) ராசிபலன் – மேஷம்

இன்றைய (23.07.2026) ராசிபலன் – ரிஷபம்

இன்றைய (23.07.2026) ராசிபலன் – மிதுனம்

Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram YouTube RSS
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
KoilgalKoilgal
Home»Featured»‘ஆபரேஷன்’ விஜய் – திமுகவின் ‘கிறிஸ்துமஸ்’ வியூகம்
Featured

‘ஆபரேஷன்’ விஜய் – திமுகவின் ‘கிறிஸ்துமஸ்’ வியூகம்

Editor TN TalksBy Editor TN TalksDecember 13, 2025Updated:December 13, 2025No Comments1 Min Read
Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
Follow Us
Facebook X (Twitter) Instagram YouTube
stalin vijay 1
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

கிறிஸ்தவர்கள் வாக்கு வங்கி எந்த வகையிலும் விஜய் பக்கம் திரும்பிவிடக் கூடாது என்பதில் திமுக கண்ணும் கருத்துமாக இருக்கிறது. இதை உறுதிப்படுத்தும் விதமாக, திருநெல்வேலியில் டிசம்பர் 20-ம் தேதி நடைபெறவுள்ள கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார்.

டிசம்பர் 20-ம் தேதி காலையில் அரசு விழாவில் பங்கேற்கும் முதல்வர், மாலையில் கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் சார்பில் பாளைங்கோட்டையில் நடைபெறும் கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்கிறார். இதுபோல் கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் நடைபெறும் கிறிஸ்துமஸ் விழாவில் துணை முதல்வர் உதயநிதி பங்கேற்கிறார்.

தென்மாவட்டங்களில் சிறுபான்மையினரின் வாக்கு வங்கி பல தொகுதிகளில் கணிசமாக உள்ளது. இதை இழந்துவிட்டால் தென்மாவட்டங்கள் தங்களது கைவிட்டுப்போய்விடும் என்பதை திமுக-வும் காங்கிரஸும் உணர்ந்திருக்கின்றன. இதனால்தான் அந்த வாக்கு வங்கியை தக்கவைப்பதற்கான செயல்திட்டங்களை திமுக முன்கூட்டியே செயல்படுத்தத் தொடங்கியிருக்கிறது.

சில மாதங்களுக்கு முன்பு, அரசு விழாவுக்காக நெல்லை வந்திருந்த முதல்வர், சிஎஸ்ஐ கிறிஸ்தவ பேராயர், குருமார்களை சந்தித்துப் பேசிவிட்டுச் சென்றார். இதுபோல், தூத்துக்குடி அரசு விழாவுக்குச் சென்றிருந்த போதும் பல்வேறு கிறிஸ்தவ சபைகளைச் சேர்ந்த பேராயர்கள், ஆயர்களை முதல்வர் சந்தித்துப் பேசினார். அடுத்ததாக இப்போது கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்கிறார்.

திமுக கூட்டணிக்கு சாதகமாக இருக்கும் சிறுபான்மையினர் வாக்குகளில் இம்முறை விஜய் சேதாரம் உண்டாக்கலாம் என உளவுத்துறை எச்சரித்திருப்பதால் அதை சரிசெய்யும் விதமாக முதல்வரும் துணை முதல்வரும் கிறிஸ்துமஸ் விழாக்களுக்கு முக்கியத்துவம் அளித்திருப்பதாகத் தெரிகிறது. ஆனால், கிறிஸ்துமஸ் விழாக்களில் இவர்கள் பங்கேற்பதால் மட்டுமே கிறிஸ்தவ மக்களின் வாக்குகள் விஜய் பக்கம் சாயாமல் இருக்குமா என்பது தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தான் தெரியும்.

Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
Previous Articleஜோதிட நாள்காட்டி 13.12.2025 | கார்த்திகை 27
Next Article தனிக்கட்சியா? பாஜகவா? எம்ஜிஆர் நினைவு நாளில் முடிவை அறிவிக்கிறார் ஓபிஎஸ்!
Editor TN Talks

Related Posts

இன்றைய (23.07.2026) ராசிபலன் – மேஷம்

July 23, 2026

இன்றைய (23.07.2026) ராசிபலன் – ரிஷபம்

July 23, 2026

இன்றைய (23.07.2026) ராசிபலன் – மிதுனம்

July 23, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Ads
ADS
Latest Posts

இன்றைய (23.07.2026) ராசிபலன் – மேஷம்

இன்றைய (23.07.2026) ராசிபலன் – ரிஷபம்

இன்றைய (23.07.2026) ராசிபலன் – மிதுனம்

இன்றைய (23.07.2026) ராசிபலன் – கடகம்

இன்றைய (23.07.2026) ராசிபலன் – சிம்மம்

Trending Posts

இன்றைய (23.07.2026) ராசிபலன் – மீனம்

July 23, 2026

இன்றைய (23.07.2026) ராசிபலன் – தனுசு

July 23, 2026

இன்றைய (23.07.2026) ராசிபலன் – மகரம்

July 23, 2026

இன்றைய (23.07.2026) ராசிபலன் – கும்பம்

July 23, 2026

இன்றைய (23.07.2026) ராசிபலன் – மேஷம்

July 23, 2026
Facebook X (Twitter) Instagram YouTube RSS
  • Home
  • About us
  • Privacy Policy
  • Contact us
© 2026 TN Talks.

Type above and press Enter to search. Press Esc to cancel.