நெல்லை பாளையங்கோட்டையில் அமைந்துள்ள பழமையான வைணவ திருத்தலங்களில் ஒன்று ஸ்ரீ அழகிய மன்னார் இராஜகோபாலசுவாமி திருக்கோவில். இத் திருக்கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு உற்சவங்கள் நடைபெற்று வருகின்றது. ஆடி மாதம் என்பது ஆன்மீக ரீதியாகவும், இயற்கை ரீதியாகவும் மிகவும் புனிதமான மற்றும் சக்தி வாய்ந்த மாதமாகக் கருதப்படுகிறது. இந்த மாதம் ‘தட்சிணாயன புண்ணிய காலம்’ என்று அழைக்கப்படுகிறது.
ஆடி மாத பிறப்பை முன்னிட்டு இன்று காலை நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தாிசனம் நடைபெற்றது. தொடா்ந்து மூலஸ்தானத்தின் முன் அமைந்துள்ள கருடன் சன்னதி முன்பு கோபூஜை நடைபெற்றது. பசுவுக்கும் கன்றுக்கும் புது வஸ்திரம் அணிவித்து ஸ்ரீசுக்தம் சொல்லி பூக்கள் மற்றும் குங்குமத்தால் அா்ச்சனை செய்யப்பட்டது. பின்னா் பால் நைவேத்யம் செய்யப்பட்டு மஹா தீபாராதனை நடந்தது.
கோ பூஜை முடிந்ததம் பக்தா்கள் கோமாதாவை வலம் வந்து வணங்கி பசுக்களுக்கு பழங்கள், கீரைகள் வழங்கி வழிபட்டனா். பின்னா் ஸ்ரீராஜகோபாலருக்கு தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து பக்தா்களுக்கு ஸ்ரீரம்(பால்) ஸ்ரீசடாாி வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
