2026 ஆனி மாதம் (15 ஜூன் 2026 முதல் 16 ஜூலை 2026 வரை) 12 ராசிகளுக்கான மாத பலன்கள்:

ஆனி மாதத்தில் சூரியன் ஜூன் 16 அன்று மிதுன ராசிக்கு பெயர்ச்சி ஆகி, புதனுடன் இணைந்து புதாதித்ய ராஜயோகம் உருவாக்குகிறது. பத்ர யோகம் போன்ற சிறப்பு யோகங்கள் சில ராசிகளுக்கு நல்ல பலன்களைத் தரும்.

கன்னி: நீண்ட நாள் தடைபட்ட முயற்சிகள் சுமூகமாக நிறைவடையும். வேலையில் பணிச்சுமை அதிகரிக்கலாம், இருப்பினும், அதைச் உங்களால் சிறப்பாகக் கையாள முடியும். தொழிலில் அரசு சார்ந்த சலுகைகள், வாய்ப்புகள் உருவாகும். புதிய ஒப்பந்தங்கள் ஏற்படும் சூழல் அமையும். தொழிலில் உள்ள குறைகளை நீக்க இதுவே சரியான நேரம். அதற்கான முயற்சியை மேற்கொள்வது அவசியம். தொழிலில் பங்குதாரர்களுடன் சுமுகமான உறவு நீடிக்கவும். அரசியலில் மறைமுக எதிர்ப்புகளைத் தாண்டி முன்னேற வேண்டியிருக்கும். எதிர்ப்புகளை கவனமாக கையாள வேண்டும். பொறுமையே ஆயுதம். கடின உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கும். கலைத்துறையில் உள்ளவர்களின் தொடர்பு பெருக்குவது இந்த காலகட்டத்தில் அவசியம்.

Share.
Leave A Reply

Exit mobile version