2026 ஆனி மாதம் (15 ஜூன் 2026 முதல் 16 ஜூலை 2026 வரை) 12 ராசிகளுக்கான மாத பலன்கள்:

ஆனி மாதத்தில் சூரியன் ஜூன் 16 அன்று மிதுன ராசிக்கு பெயர்ச்சி ஆகி, புதனுடன் இணைந்து புதாதித்ய ராஜயோகம் உருவாக்குகிறது. பத்ர யோகம் போன்ற சிறப்பு யோகங்கள் சில ராசிகளுக்கு நல்ல பலன்களைத் தரும்.

துலாம்: தாமதமாகிக் கொண்டிருந்த திருமண விஷயங்களில் மேற்கொள்ளும் முயற்சிகள்  தற்போது கைகூடும். குடும்பத்தில் சுப விஷயங்கள் நிகழும். தொழில் மற்றும் வேலையில் தன்னம்பிக்கை, புதிய உத்வேகம் பிறக்கும். தனித் திறமைக்காகப் பாராட்டப்படுவீர்கள். தொழிலை விரிவாக்குவதற்கான முயற்சி மேற்கொள்வீர்கள். புதிய தொழில் கூட்டாளிகள் கிடைப்பார்கள். தொழில் வளர்ச்சியில் இருந்த தடைகள் நீங்கும். சமுதாய நலனுக்காகச் செய்யும் காரியங்கள் பெரும் புகழைத் தேடித்தரும். கலைத்துறையினருக்கு வெளிநாடு சார்ந்த வாய்ப்புகள் வரலாம். உங்களின் கலைத் திறமைக்குத் ராட்டு கிடைக்கலாம். ஆன்மிகப் பயணங்கள் மேற்கொள்வீர்கள். உடன் பிறந்தவர்களின் ஆதரவு சாதகமாக இருக்கும். பணம் சார்ந்த விஷயங்களை கவனமாக கையாள வேண்டும்.

Share.
Leave A Reply

Exit mobile version