Close Menu
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
What's Hot

ஆடி கிருத்திகை திருவிழா!. திருச்செந்தூர் முருகன் கோயிலில் தங்கத்தேர் பவனி கோலாகலம்!

சேலம் குகை மாரியம்மன் கோவில் வண்டி வேடிக்கை திருவிழா!. திரளான பக்தர்கள் பங்கேற்பு!

விண்ணதிர ‘கோவிந்தா கோவிந்தா’ கோஷம்..!! ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 16 சக்கர தேரோட்டம் கோலாகலம்..!!

Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram YouTube RSS
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
KoilgalKoilgal
Home»Featured»“உங்கள் கட்சிக்கு அதிமுக என்ற பெயர் எதற்கு?” – இபிஎஸ்-க்கு ஸ்டாலின் கேள்வி
Featured

“உங்கள் கட்சிக்கு அதிமுக என்ற பெயர் எதற்கு?” – இபிஎஸ்-க்கு ஸ்டாலின் கேள்வி

Editor TN TalksBy Editor TN TalksDecember 18, 2025Updated:December 18, 2025No Comments1 Min Read
Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
Follow Us
Facebook X (Twitter) Instagram YouTube
stalinnn
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

“இவ்வளவு குனிந்து கும்பிடு போடும் உங்களது கட்சிக்கு, ‘அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்’ என்ற பெயர் எதற்கு?” என்று நூறு நாள் வேலைத்திட்ட விவகாரத்தில் மவுனமாக இருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பச்சைத்துண்டு போட்டுக்கொண்டு பச்சைத் துரோகம் செய்பவருக்கு, மீண்டும் விவசாயிகள் கண்ணில் தெரியவில்லையா? கிராமப்புற ஏழை மக்களின் வயிற்றிலேயே அடிக்கும் விக்சித் பாரத் கேரண்டி பார் ரோஜ்கார் அண்டு அஜீவிகா மிஷன் (VBGRAMG) குறித்து எதிர்க்கட்சியான அதிமுக-வின் நிலைப்பாடு என்ன?

மூன்று வேளாண் சட்டங்கள், சிஏஏ போல இதிலும் அமித் ஷாவுக்கு ஆமாம் சாமி போட்டு ஆதரவு தரப்போகிறாரா பழனிசாமி? மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் காந்தியடிகளின் பெயரை அகற்றிவிட்டு, சொன்னால் வாய் சுளுக்கிக் கொள்ளும்படி இந்தியில் பெயரிட்டுள்ளனர். இந்தித் திணிப்பை எதிர்த்து வென்ற அண்ணாவின் பெயரைக் கட்சியின் பெயரில் வைத்துக்கொண்டு, இதை எதிர்க்கக் கூடவா தயக்கம்?

திட்டத்துக்கான நிபந்தனைகள் எல்லாம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில். நிதிக்கு மட்டும் மாநில அரசு பங்களிக்க வேண்டும் என்பதை அதிமுக எந்த எதிர்ப்புமின்றி ஏற்றுக்கொள்கிறதா. உங்கள் தலைவி ஜெயலலிதா இருந்திருந்தால் இதற்கு ஒப்புக்கொண்டிருப்பாரா? வறுமையை ஒழித்த சாதனைக்குத் தண்டனையாக தமிழகத்தில் நூறு நாள் வேலைத் திட்டமே நின்றுபோகும் ஆபத்தை எதிர்நோக்கி உள்ளோம். இதற்கு, எப்படி முட்டு கொடுக்கப் போகிறார் எதிர்க்கட்சித் தலைவர்?

இவ்வளவு குனிந்து கும்பிடு போடும் உங்களது கட்சிக்கு, ‘அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்’ என்ற பெயர் எதற்கு? நான் கேட்கவில்லை; தமிழ்நாட்டு மக்கள் கேட்கிறார்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
Previous Articleஜோதிட நாள்காட்டி 18.12.2025 | மார்கழி 03
Next Article “அதிமுக ஆட்சிக்கு வந்ததும் மாணவர்களுக்கு மீண்டும் லேப்டாப்” – பழனிசாமி உறுதி
Editor TN Talks

Related Posts

ஆடி கிருத்திகை திருவிழா!. திருச்செந்தூர் முருகன் கோயிலில் தங்கத்தேர் பவனி கோலாகலம்!

August 7, 2026

சேலம் குகை மாரியம்மன் கோவில் வண்டி வேடிக்கை திருவிழா!. திரளான பக்தர்கள் பங்கேற்பு!

August 7, 2026

விண்ணதிர ‘கோவிந்தா கோவிந்தா’ கோஷம்..!! ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 16 சக்கர தேரோட்டம் கோலாகலம்..!!

August 7, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Ads
ADS
Latest Posts

ஆடி கிருத்திகை திருவிழா!. திருச்செந்தூர் முருகன் கோயிலில் தங்கத்தேர் பவனி கோலாகலம்!

சேலம் குகை மாரியம்மன் கோவில் வண்டி வேடிக்கை திருவிழா!. திரளான பக்தர்கள் பங்கேற்பு!

விண்ணதிர ‘கோவிந்தா கோவிந்தா’ கோஷம்..!! ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 16 சக்கர தேரோட்டம் கோலாகலம்..!!

தூத்துக்குடி : இருக்கன்குடி மாரியம்மன் கோயில் ஆடிப் பெருந்திருவிழா..! திரளான பக்தர்கள் சாமி தரிசனம்..!

ஆடி கடைசி வெள்ளி சிறப்பு.. இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் பெருந்திருவிழா ஆரம்பம்!

Trending Posts

ஆடி கிருத்திகை திருவிழா!. திருச்செந்தூர் முருகன் கோயிலில் தங்கத்தேர் பவனி கோலாகலம்!

August 7, 2026

சேலம் குகை மாரியம்மன் கோவில் வண்டி வேடிக்கை திருவிழா!. திரளான பக்தர்கள் பங்கேற்பு!

August 7, 2026

விண்ணதிர ‘கோவிந்தா கோவிந்தா’ கோஷம்..!! ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 16 சக்கர தேரோட்டம் கோலாகலம்..!!

August 7, 2026

தூத்துக்குடி : இருக்கன்குடி மாரியம்மன் கோயில் ஆடிப் பெருந்திருவிழா..! திரளான பக்தர்கள் சாமி தரிசனம்..!

August 7, 2026

ஆடி கடைசி வெள்ளி சிறப்பு.. இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் பெருந்திருவிழா ஆரம்பம்!

August 7, 2026
Facebook X (Twitter) Instagram YouTube RSS
  • Home
  • About us
  • Privacy Policy
  • Contact us
© 2026 TN Talks.

Type above and press Enter to search. Press Esc to cancel.