கற்பனைத் திறன் அதிகம் வெளிப்படும் நாள். பிள்ளைகளின் வளர்ச்சி பெருமிதம் தரும். கலைத்துறை மற்றும் இலக்கியத்துறையில் இருப்பவர்களுக்குப் புதிய வாய்ப்புகள் தேடி வரும். பூர்வ புண்ணிய பலத்தால் தொட்ட காரியங்கள் துலங்கும். பங்குச் சந்தை முதலீடுகளில் எதிர்பார்த்ததை விட நல்ல லாபம் கிடைக்க வாய்ப்புண்டு. தொழிலில் புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். எதிர்பார்த்த பண வரவு இருக்கும். பிள்ளைகளின் கல்வி, வேலைவாய்ப்பு தொடர்பான நல்ல செய்திகள் வரும். குடும்பத்துடன் ஆன்மிகத் தலங்களுக்குச் செல்வீர்கள். முதுகு வலி அல்லது அஜீரணம் போன்ற சிறு பிரச்சனைகள் வந்து மறையும்.
அதிர்ஷ்ட எண்: 3
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
