முயற்சிகளின் தீவிரமான செயல்பாடுகள் வெற்றியைத் தரும். அரசியல் தொடர்பில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் வர வாய்ப்பு உள்ளது. பிற்பகலுக்குப் பிறகு பணிச்சுமை குறையும். கலைத்துறை மற்றும் ஊடகத் துறையில் உள்ளவர்களுக்குப் புதிய திருப்பங்கள் ஏற்படும். புதிய சிந்தைகளுக்கு வரவேற்பு இருக்கும். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவீர்கள். ஆராய்ச்சித் துறை மாணவர்களுக்குப் புதிய கண்டுபிடிப்புகளுக்கான வழிகாட்டுதல் கிடைக்கும்.
அதிர்ஷ்ட எண்: 6, 9
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு
