Close Menu
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
What's Hot

ஆடி கிருத்திகை திருவிழா!. திருச்செந்தூர் முருகன் கோயிலில் தங்கத்தேர் பவனி கோலாகலம்!

சேலம் குகை மாரியம்மன் கோவில் வண்டி வேடிக்கை திருவிழா!. திரளான பக்தர்கள் பங்கேற்பு!

விண்ணதிர ‘கோவிந்தா கோவிந்தா’ கோஷம்..!! ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 16 சக்கர தேரோட்டம் கோலாகலம்..!!

Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram YouTube RSS
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
KoilgalKoilgal
Home»Featured»4-ம் பாவகம் சொல்லும் ரகசியம் என்ன?
Featured

4-ம் பாவகம் சொல்லும் ரகசியம் என்ன?

Editor web1By Editor web1June 13, 2026No Comments2 Mins Read
Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
Follow Us
Facebook X (Twitter) Instagram YouTube
WhatsApp Image 2026 06 13 at 7.06.58 PM
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

ஒருவரின் சுகபோக வாழ்க்கையை கணிப்பதற்கு 4ம் பாவகமே முக்கியம். இது, ‘கேந்திர ஸ்தானம்’ என்றும் அழைக்கப்படுகிறது.

4-ம் பாவகத்தின் காரகங்கள்:

தாய், வீடு, வாகனம், பூமி, நிலம், சொத்துக்கள். மன அமைதி, மகிழ்ச்சி, சுகபோகங்கள், கல்வி (தொடக்கக் கல்வி), வசிக்கும் இடம். தாயின் உறவுகள், உறவினர்களுடனான தொடர்பு, உடல் ரீதியாக இதயம் ஆகியவற்றை குறிப்பது 4ம் பாவகம் ஆகும்.

சாதக மற்றும் பாதகங்கள்:

ஒருவரின் ஜாதகத்தில் 4-ம் பாவகம் வலுவாக இருந்தால், அவர் சிறந்த சொத்து சுகங்களுடனும், நல்ல தாய்வழி ஆதரவுடனும், அமைதி மற்றும் நிம்மதியான மனநிலையுடன் இருப்பார். சமூகத்தில் அந்தஸ்து மற்றும் கௌரவம் கிடைக்கும். அதுவே, ஒருவரின் ஜாதகத்தில் 4-ம் பாவகம் பலவீனமாக இருந்தால் அல்லது பாப கிரகங்களின் (சூரியன், செவ்வாய், சனி, ராகு, கேது) தொடர்பில் இருந்தால், தாயின் உடல்நிலையில் பாதிப்பு, மன அழுத்தம், வீடு/வாகன இழப்பு அல்லது சொத்து தொடர்பான வழக்குகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

4-ம் பாவகத்தில் 9 கிரகங்கள் இருந்தால் ஏற்படும் பலன்கள்:

கிரகங்களின் தன்மைக்கேற்ப 4-ம் பாவகத்தில் அவை அமரும் போது பலன்கள் மாறுபடும்.

சூரியன்: தாய் வழி உறவுகளில் கருத்து வேறுபாடு, சொத்துச் சிக்கல்கள் இருக்கும். ஒரே இடத்தில் இருக்கும் அமையாது. ஆனால் அதிகாரமிக்க பதவிகள் கிடைக்கும்.

சந்திரன்: தாய் மீது மிகுந்த அன்பு கொண்டவராக இருப்பார். சொந்த வீடு மற்றும் வாகன வசதி அமையும். மன அமைதி, நல்ல கற்பனைத்திறன் இருக்கும்.

செவ்வாய்: நிலம் மற்றும் சொத்துக்களால் லாபம் உண்டாகும். ஆனால் மனக் கசப்புகள், கோபமான குணம் இருக்கும். சில சமயம் சொத்து வழக்குகள் ஏற்படும் சூழல் அமையும்.

புதன்: அறிவுசார்ந்த கல்வி அமையும். வாகன யோகம் உண்டாகும். தாய் வழி ஆதரவு நல்ல உறவுமுறை இருப்பார்கள்.

குரு: மிகச் சிறந்த நிலையாக பார்க்கப்படுகிறது. சொத்துக்கள், வசதி வாய்ப்புகள், தாயின் ஆசி, அமைதியான வாழ்க்கை, ஆன்மிக ஆர்வம் ஆகியவை அமையும்.

சுக்கிரன்: ஆடம்பரமான வீடு, விலையுயர்ந்த வாகனங்கள் இருக்கும். மிகுந்த மகிழ்ச்சியான வாழ்க்கை, நல்ல நண்பர்கள் அமைவார்கள்.

சனி: கடின உழைப்பிற்குப் பிறகு தான் சொத்து சேர்க்கை அமையும். தாயின் உடல்நிலை பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. மனக் கவலைகள், நீண்ட கால சொத்து வழக்குகள் இருக்கும்.

ராகு: வெளிநாட்டுத் தொடர்புகளால் சொத்துக்கள் அமையும். தாயுடன் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புள்ளது. மனதில் ஒருவித திருப்தியின்மை இருக்கும்.

கேது: ஆன்மிக நாட்டத்தால் சொத்து சுகங்களில் பற்றின்மை உருவாகும். சில நேரங்களில் வீடு மாறிக் கொண்டே இருப்பது போன்ற நிலை இருக்கும். தாயின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

லக்னம், ராசி, 4ம் அதிபதி நிலை, நவாம்சம், தசா- புக்தி, பார்வைகள் ஆகியவை முக்கியம். ஒரு கிரகத்தை மட்டும் பார்க்காமல் முழு ஜாதகத்தில் மற்ற பாவகங்கள், கிரக அமர்வுகளையும் பார்க்க வேண்டும்.

Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
Previous Articleகாஞ்சி வரதராஜ பெருமாள் கோவில்: வரலாற்றுப் பெருமை மிக்க திவ்ய தேசம்..!!
Next Article ஞாயிற்றுக்கிழமை வழிபாடு!. என்ன செய்யவேண்டும்?. என்ன செய்யக்கூடாது?
Editor web1
  • Website

Related Posts

ஆடி கிருத்திகை திருவிழா!. திருச்செந்தூர் முருகன் கோயிலில் தங்கத்தேர் பவனி கோலாகலம்!

August 7, 2026

சேலம் குகை மாரியம்மன் கோவில் வண்டி வேடிக்கை திருவிழா!. திரளான பக்தர்கள் பங்கேற்பு!

August 7, 2026

விண்ணதிர ‘கோவிந்தா கோவிந்தா’ கோஷம்..!! ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 16 சக்கர தேரோட்டம் கோலாகலம்..!!

August 7, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Ads
ADS
Latest Posts

ஆடி கிருத்திகை திருவிழா!. திருச்செந்தூர் முருகன் கோயிலில் தங்கத்தேர் பவனி கோலாகலம்!

சேலம் குகை மாரியம்மன் கோவில் வண்டி வேடிக்கை திருவிழா!. திரளான பக்தர்கள் பங்கேற்பு!

விண்ணதிர ‘கோவிந்தா கோவிந்தா’ கோஷம்..!! ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 16 சக்கர தேரோட்டம் கோலாகலம்..!!

தூத்துக்குடி : இருக்கன்குடி மாரியம்மன் கோயில் ஆடிப் பெருந்திருவிழா..! திரளான பக்தர்கள் சாமி தரிசனம்..!

ஆடி கடைசி வெள்ளி சிறப்பு.. இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் பெருந்திருவிழா ஆரம்பம்!

Trending Posts

ஆடி கிருத்திகை திருவிழா!. திருச்செந்தூர் முருகன் கோயிலில் தங்கத்தேர் பவனி கோலாகலம்!

August 7, 2026

சேலம் குகை மாரியம்மன் கோவில் வண்டி வேடிக்கை திருவிழா!. திரளான பக்தர்கள் பங்கேற்பு!

August 7, 2026

விண்ணதிர ‘கோவிந்தா கோவிந்தா’ கோஷம்..!! ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 16 சக்கர தேரோட்டம் கோலாகலம்..!!

August 7, 2026

தூத்துக்குடி : இருக்கன்குடி மாரியம்மன் கோயில் ஆடிப் பெருந்திருவிழா..! திரளான பக்தர்கள் சாமி தரிசனம்..!

August 7, 2026

ஆடி கடைசி வெள்ளி சிறப்பு.. இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் பெருந்திருவிழா ஆரம்பம்!

August 7, 2026
Facebook X (Twitter) Instagram YouTube RSS
  • Home
  • About us
  • Privacy Policy
  • Contact us
© 2026 TN Talks.

Type above and press Enter to search. Press Esc to cancel.