Close Menu
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
What's Hot

பிரதோஷ வழிபாடு எதற்காக? சனி பிரதோஷத்தின் பலன்கள் என்ன?

பெரம்பலூர் : ஸ்ரீகம்பப் பெருமாள் கோயில் குடமுழுக்கு கோலாகலம்..! திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம்..!

காஞ்சிபுரம் : வரதராஜப் பெருமாள் கோயிலில் கருட ஜெயந்தி உற்சவம்..! ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்..!

Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram YouTube RSS
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
KoilgalKoilgal
Home»திருவிழா»சிதம்பரம் : நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சன தரிசனம்..! பக்தி பரவசத்துடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள்..!
திருவிழா

சிதம்பரம் : நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சன தரிசனம்..! பக்தி பரவசத்துடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள்..!

Editor 4 webBy Editor 4 webJune 22, 2026No Comments1 Min Read
Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
Follow Us
Facebook X (Twitter) Instagram YouTube
5 2
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

உலகப் பிரசித்தி பெற்ற கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனித் திருமஞ்சன விழா கடந்த 13-ம் தேதி தொடங்கி விமரிசையாக நடைபெற்று வருகிறது. தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும், வீதியுலாவும் நடைபெற்றது.

வெள்ளி சந்திர பிறை வாகனம், தங்க சூரிய பிறை வாகனம், பூத வாகனம், வெள்ளி ரிஷப வாகனம், வெள்ளி யானை வாகனம், தங்க கைலாச வாகனம் என நாள்தோறும் ஒவ்வொரு வாகனத்தில் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 20-ம் தேதி தங்க ரதத்தில் பிச்சாண்டவர் வீதியுலாவும் நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தேரோட்டம் நேற்று விமரிசையாக நடைபெற்ற நிலையில், தேரோட்டம் முடிந்ததும் நடராஜப்பெருமான், சிவகாமசுந்தரி, ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள ரகசிய அறையில் எழுந்தருளினர். அங்கு நள்ளிரவில் இருந்து அதிகாலை வரை பூஜைகள் நடைபெற்றது.

விழாவின் சிகர நிகழ்வான ஆனித் திருமஞ்சனத்தை முன்னிட்டு இன்று அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பு காலை 4 மணி முதல் 6 மணி வரை சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்திக்கு பல்வேறு திரவியங்களால் மகா அபிஷேகம் நடைபெற்றது. காலை 10 மணிக்கு சித்சபையில் ரகசிய பூஜையும், பஞ்சமூர்த்தி வீதியுலாவும் நடைபெற்றது

இன்று பிற்பகல் ஆனித்திருமஞ்சன தரிசனம் நடைபெற்றது. ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து நடனமாடியபடி புறப்பட்ட நடராஜப் பெருமான் – சிவகாமசுந்தரி, கோயில் கருவறைக்கு சென்றனர். நடராஜரின் திருநடன காட்சியை காண்பதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்திருந்தனர். ஆனிதிருமஞ்சன தரிசனத்தை முன்னிட்டு காவல்துறை சார்பில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
Previous Articleகோவை : ஆன்மீக அடையாளமாய் பேரூர் பட்டீஸ்வரர் ஆலயம்..! கோயிலின் அதிசயங்களில் சில..!
Next Article நாமக்கல் : விஷக்கடியை நிவர்த்தி செய்யும் கந்தசாமி கோயில்..! மண்விபூதியே இங்கு பிரசாதம்..!
Editor 4 web

Related Posts

பிரதோஷ வழிபாடு எதற்காக? சனி பிரதோஷத்தின் பலன்கள் என்ன?

June 26, 2026

பெரம்பலூர் : ஸ்ரீகம்பப் பெருமாள் கோயில் குடமுழுக்கு கோலாகலம்..! திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம்..!

June 26, 2026

காஞ்சிபுரம் : வரதராஜப் பெருமாள் கோயிலில் கருட ஜெயந்தி உற்சவம்..! ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்..!

June 26, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Ads
ADS
Latest Posts

பிரதோஷ வழிபாடு எதற்காக? சனி பிரதோஷத்தின் பலன்கள் என்ன?

பெரம்பலூர் : ஸ்ரீகம்பப் பெருமாள் கோயில் குடமுழுக்கு கோலாகலம்..! திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம்..!

காஞ்சிபுரம் : வரதராஜப் பெருமாள் கோயிலில் கருட ஜெயந்தி உற்சவம்..! ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்..!

இன்றைய (26.06.2026) ராசி பலன் – மேஷம்

இன்றைய (26.06.2026) ராசி பலன் – ரிஷபம்

Trending Posts

பெரம்பலூர் : ஸ்ரீகம்பப் பெருமாள் கோயில் குடமுழுக்கு கோலாகலம்..! திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம்..!

June 26, 2026

பிரதோஷ வழிபாடு எதற்காக? சனி பிரதோஷத்தின் பலன்கள் என்ன?

June 26, 2026

காஞ்சிபுரம் : வரதராஜப் பெருமாள் கோயிலில் கருட ஜெயந்தி உற்சவம்..! ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்..!

June 26, 2026

ஆம்பூர் : திருப்பதி கெங்கையம்மன் சிரசு திருவிழா..! ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்..!

June 19, 2026

களத்திர தோஷம் – காரணங்கள் மற்றும் பரிகார வழிகள்

May 6, 2026
Facebook X (Twitter) Instagram YouTube RSS
  • Home
  • About us
  • Privacy Policy
  • Contact us
© 2026 TN Talks.

Type above and press Enter to search. Press Esc to cancel.