Close Menu
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
What's Hot

ஆனி திருமஞ்சனம் 2026: ஒவ்வொரு ராசிக்காரர்களும் வழிபடும் முறையை தெரிஞ்சிக்கோங்க..!!

மதுரை : மதனகோபால சுவாமி கோயில் பற்றி தெரியுமா? சிவபெருமானுக்காக புல்லாங்குழல் இசைத்த வரலாறு..!

ஸ்ரீ ஆதிபுரீஸ்வரர் திருக்கோவிலில் 3ம் ஆண்டு வருஷாபிஷேக விழா கோலாகலம்..!!

Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram YouTube RSS
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
KoilgalKoilgal
Home»ஆன்மீகம்»பூண்டிமாதா பேராலயத்தில் ஆண்டு பெருவிழா தேர்பவனி..! திரளான பக்தர்கள் பங்கேற்பு..!
ஆன்மீகம்

பூண்டிமாதா பேராலயத்தில் ஆண்டு பெருவிழா தேர்பவனி..! திரளான பக்தர்கள் பங்கேற்பு..!

Editor web1By Editor web1May 15, 2026Updated:May 22, 2026No Comments1 Min Read
Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
Follow Us
Facebook X (Twitter) Instagram YouTube
2 4
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே பூண்டிமாதா பேராலய ஆண்டு பெருவிழாவில் சிறப்பு நிகழ்ச்சியான பூண்டி அன்னையின் ஆடம்பர தேர்பவனி வியாழக்கிழமை (மே. 14) இரவு நடைபெற்றது. பூண்டிமாதா பேராலயத்தில் நிகழாண்டு பெருவிழா 6ஆம் தேதி புதன்கிழமை மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து நவநாட்கள் திருப்பலி பூசைகளை பல்வேறு அருட்தந்தையர் நிறைவேற்றினர்.

வியாழக்கிழமை பூண்டி மாதா பேராலயத்தின் முன்னாள் பங்கு தந்தையர் வி.எஸ்.லூர்துசேவியர், இராயப்பர் ஆகியோரின் நினைவுத் திருப்பலி பூசைகள் நிறைவேற்றப்பட்டது. மாலை 6.00 மணிக்கு கும்பகோணம் மறை மாவட்ட மேதகு ஆயர் அ.ஜீவானந்தம் தலைமை ஏற்று கூட்டுப்பாடல் திருப்பலிபூசை நடத்தி, மறையுரையாற்றி, ஆசி வழங்கி, இரவு 8.30 மணிக்கு மல்லிகை மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மாதாவின் அலங்கார, ஆடம்பர தேர்பவனியை புனிதப்படுத்தி துவக்கிவைத்தார்.

குடியிருந்த மக்கள் பூண்டி மாதாவே வாழ்க, அன்னையே வாழ்க என்று கோஷங்கள் எழுப்பினர். தேர் பவனியில் கும்பகோணம் மறைமாவட்டமுதன்மை குரு எம்.பிலோமின்தாஸ், மறைமாவட்ட பொருளாளர் ஜெ.அந்தோனிஜோசப், மைக்கேல்பட்டி மறை வட்ட முதன்மை குரு எஸ்.இன்னசென்ட், பூண்டிமாதா பேராலய அதிபரும் பங்கு தந்தையுமான பி.ஜெ.சாம்சன், துணை அதிபர் ஜெ.ரூபன்அந்தோணிராஜ், பூண்டிமாதா தியான மைய இயக்குநர் எஸ். ஆல்பர்ட் சேவியர், உதவித் தந்தைகள் எஸ்.அருள்லாரன்ஸ், எம்.செல்வகுமார், ஆன்மீக தந்தை பி.ஜோஸப், சுற்றுவட்ட பங்கு குருமார்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். தொடர்ந்து வாண வேடிக்கைகள் நடைபெற்றன.

Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
Previous Articleஅறுபடை வீடுகளின் வரலாறு தெரியுமா?
Next Article பிறந்தது வைகாசி மாதம்..! கோயில்களில் சிறப்பு பூஜைகள்..!
Editor web1
  • Website

Related Posts

ஆனி திருமஞ்சனம் 2026: ஒவ்வொரு ராசிக்காரர்களும் வழிபடும் முறையை தெரிஞ்சிக்கோங்க..!!

June 19, 2026

ஸ்ரீ ஆதிபுரீஸ்வரர் திருக்கோவிலில் 3ம் ஆண்டு வருஷாபிஷேக விழா கோலாகலம்..!!

June 19, 2026

புதுச்சேரி: நாகவல்லி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் கோலாகலம்!

June 18, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Ads
ADS
Latest Posts

ஆனி திருமஞ்சனம் 2026: ஒவ்வொரு ராசிக்காரர்களும் வழிபடும் முறையை தெரிஞ்சிக்கோங்க..!!

மதுரை : மதனகோபால சுவாமி கோயில் பற்றி தெரியுமா? சிவபெருமானுக்காக புல்லாங்குழல் இசைத்த வரலாறு..!

ஸ்ரீ ஆதிபுரீஸ்வரர் திருக்கோவிலில் 3ம் ஆண்டு வருஷாபிஷேக விழா கோலாகலம்..!!

செல்வம் பெருகும் வெள்ளிக்கிழமை!. விரத முறைகளும் பலன்களும்!

ஆம்பூர் : திருப்பதி கெங்கையம்மன் சிரசு திருவிழா..! ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்..!

Trending Posts

இன்றைய (19.06.2026) ராசி பலன் – மேஷம்

June 19, 2026

இன்றைய (19.06.2026) ராசி பலன் – மிதுனம்

June 19, 2026

இன்றைய (19.06.2026) ராசி பலன் – கும்பம்

June 19, 2026

இன்றைய (19.06.2026) ராசி பலன் – ரிஷபம்

June 19, 2026

மதுரை : மதனகோபால சுவாமி கோயில் பற்றி தெரியுமா? சிவபெருமானுக்காக புல்லாங்குழல் இசைத்த வரலாறு..!

June 19, 2026
Facebook X (Twitter) Instagram YouTube RSS
  • Home
  • About us
  • Privacy Policy
  • Contact us
© 2026 TN Talks.

Type above and press Enter to search. Press Esc to cancel.