நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த தேத்தாகுடி வடக்கு ஊராட்சியில் உள்ளது பிச்சைக்கொடை ஐய்யனார் கோயில். பிரசித்தி பெற்ற இக்கோயிலில் கடந்த 29-ம் தேதி யாகசாலை அமைக்கப்பட்டு முதல் முதல் யாகசாலை பூஜைகள் சிறப்பாக தொடங்கியது.
தொடர்ந்து நான்காம் கால யாகசாலை பூஜை முடிவுற்ற நிலையில் வேத விற்பன்னர்களின் வேத மந்திரங்கள் முழுங்க , இன்னிசை முழக்கங்களோடு வலம் வந்து கும்பகலசத்தை அடைந்து பிச்சைக்கொடை ஐய்யனார் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு, புனித நீர் ஊற்றி மஹா குடமுழுக்கு நடைபெற்றது.
குடமுழுக்கை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சுற்று வட்டாரப் பகுதியிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

