கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஒன்றியம் கணமூர் கிராமத்தில் ஸ்ரீலட்சுமி நரசிம்ம சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் தொகுதிக்குட்பட்ட கனமூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் சுவாமி ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் மூலவரான லட்சுமி நரசிம்ம சுவாமிக்கு திருக்கல்யாணம் ஒப்பத்தவாடி செல்வராஜ் கவுண்டர், ராஜலட்சுமி குடும்பத்தினர் தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது. அதிகாலை முதல் யாகங்களும், சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது.

பத்துக்கும் மேற்பட்ட ஜீயர்கள் வேத மந்திரம் முழங்க, வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மணமேடையில், மேள தாளங்கள் முழங்க லட்சுமி நரசிம்மர் சுவாமி திருக்கல்யாண நடைபெற்றது. இந்த திருக்கல்யாண உற்சவ நிகழ்ச்சியில் கணமூர், பர்கூர், கிருஷ்ணகிரி, நாட்றம்பள்ளி, ஒப்பத்தவாடி, பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் சுவாமிக்கு வாசனை திரவியங்களால் அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டன.

இந்த கல்யாண உற்சவ நிகழ்ச்சியை விக்ரம், சுருதி, ஆர்யன், அத்விக், ஆனந்த், திவ்யா, ஆதியா, உள்ளிட்டோர் சிறப்பாக செய்திருந்தனர். நிகழ்ச்சியின் இறுதியாக சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஒப்பத்தவாடி கணமூர் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் ஆலய வளாகங்கள் முழுவதும் தோரணங்கள் மற்றும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது பொதுமக்களை வெகுவாக கவர்ந்தன.

Share.
Leave A Reply

Exit mobile version