கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே, பாகலூர் சாலையில் அமைந்துள்ள அழகன் மலையில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத அழகன் முருகன் திருக்கோயிலில், முதலாம் ஆண்டு வைகாசி விசாக பெருவிழா மிகச் சிறப்பாகத் நடந்தது.

மங்களகரமான பராபவ வருடம், வைகாசி மாதம் 16-ஆம் நாளான இன்று, முருகப்பெருமான் அவதரித்த வைகாசி விசாகத் திருநாளை முன்னிட்டு, அதிகாலை முதல் அழகன் முருகனுக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட நறுமணப் பொருட்களால் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டன.

தொடர்ந்து, சுவாமிக்கு ராஜ அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை விமரிசையாக நடைபெற்றது. “வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா”, “வேலுண்டு வினையில்லை, மயிலுண்டு பயமில்லை” என்ற பக்தர்களின் பக்தி முழக்கங்கள் விண்ணைத் தொடும் அளவுக்கு ஒலிர, ஒட்டுமொத்த ஆலய வளாகமும் சிவமயமாகக் காட்சியளித்தது.

விழாவுக்கு வருகை தந்த பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டன. அழகன் மலை அழகன் முருகனின் திருவருளைப் பெற ஓசூர் மற்றும் அதன் அண்டை மாவட்டங்களில் இருந்தும் தொடர்ந்து பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளதால், கோயில் பகுதியில் விழாக்கோலம் பூண்டுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version