புதுச்சேரி குருமாம்பேட் பகுதியில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ யோக மாயா லலிதாம்பிகை ஆலயத்தில் வைகாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு கன்யா பூஜை, சுமங்கலி பூஜை நடைபெற்று லலிதாம்பிகை அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
புதுச்சேரி குருமாம்பேட் பகுதியில் அமைந்துள்ளது ஶ்ரீ யோக மாயா லலிதாம்பிகை மற்றும் ஶ்ரீ மஹா சாம்ராஜ்ய லலிதாம்பிகை திருக்கோவில். இந்த திருக்கோவிலில் வைகாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு ஶ்ரீ மஹா சாம்ராஜ்ய லலிதாம்பிகைக்கு பால், தயிர், சந்தனம்,திருநீர், திருமஞ்சனம், குங்குமம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு மகா அபிஷேகம் செய்யப்பட்டது.

தொடர்ந்து கன்யா பூஜை , சுமங்கலி பூஜை நடைபெற்றது. தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட ஶ்ரீ யோக மாயா லலிதாம்பிகை மற்றும் ஶ்ரீ மஹா சாம்ராஜ்ய லலிதாம்பிகை அம்மனுக்கு சோடச தீபாராதனை நடைபெற்றது. இந்த கன்யா, சுமங்கலி பூஜையில் பங்கேற்ற பக்தர்கள் லலிதாம்பிகை அம்மனை வழிபட்டு சென்றனர். இதற்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாகி மகேஸ்வர சாஸ்திரிகள் மற்றும் பக்தர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

