நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள முருகன் கோயில்களில் கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
கபிலர்மலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில், கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் உள்ள பாலமுருகன், மோகனூர் காந்தமலை பாலசுப்ரமணிய சுவாமி கோவில், பொத்தனூர் பச்சைமலை பால தண்டாயுதபாணி சுவாமி கோவில், பிராந்தியத்தில் உள்ள 34.5 அடி உயரமுள்ள ஆறுமுகம் கடவுள், பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர் கோவிலில் உள்ள சுப்பிரமணியர், அனிச்சம்பாளையத்தில் உள்ள வேல் வடிவம் கொண்ட சுப்பிரமணியர், பிலிக்கல்பாளையம், கரட்டூரில் உள்ள விஜயகிரி வடபழனி ஆண்டவர்,
பரமத்தி வேலூர் பேட்டை பகவதி அம்மன் கோவிலில் எழுந்தருளியுள்ள முருகப் பெருமான், பாலப்பட்டி கதிர்மலை கந்தசாமி கோவில், கந்தம்பாளையம் அருணகிரிநாதர் மலையில் உள்ள வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் நன்செய் இடையாறு காவேரி கரையில் உள்ள சுப்பிரமணியர் கோவில், நன்செய்இடையார் திருவேலீஸ்வரர் கோயிலில் உள்ள சுப்ரமணியர் மற்றும் ராஜா சுவாமி திருக்கோவிலில் உள்ள ராஜாசுவாமி,
பொத்தனூர் சக்தி விநாயகர் கோவிலில் உள்ள பாலமுருகன் கோவில் மற்றும் பரமத்தி வேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள முருகன் கோயில்களில் சிறப்பு அபிஷேக ஆராதணைகள் நடைபெற்றது. இந்தப் பூஜைகளில், அந்தந்தப் பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானை தரிசனம் செய்தனர்.
