புகழ்பெற்ற காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் திருக்கோயில் வைகாசி பிரமோற்சவ விழா இன்று (மே 28) அதிகாலை கொடியேற்றத்துடன் விமர்சையாக துவங்கியது.

கோயில் நகரம் எனக் கூறப்படும் காஞ்சிபுரம் வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றானதும். அத்தி வரதர் புகழ்பெற்ற தேவராஜ ஸ்வாமி என அழைக்கப்படும் வரதராஜ பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது.

வருடந்தோறும் வைகாசி மாதம் பிரம்மோற்சவ விழா 10 நாட்கள் நடைபெறும். இந்தநிலையில், நேற்று (மே 27) சேனை மார் புறப்பாடு தொடங்கி, இன்று (மே 28) அதிகாலை 5 மணியளவில் பிரமோற்சவ கொடியேற்றம் நடைபெற்றது.

முன்னதாக மலையில் இருந்து ஸ்ரீதேவி பூதேவி சமேத எம்பெருமான் கொடி மரம் அருகே எழுந்தருள வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு பூஜைகளுடன் கொடியேற்ற விழா நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து சப்பர வாகனத்தில் ஸ்ரீதேவி பூதேவி உடன் பஞ்சவர்ண மாலை தங்க வைர ஆபரணங்கள் சூடி எம்பெருமான் எழுந்தருளி நகர வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். கொடியேற்ற விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.

Share.
Leave A Reply

Exit mobile version