Close Menu
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
What's Hot

அண்ணாமலையார் கோவிலில் 166-வது சுந்தரமூர்த்தி நாயனார் பெருவிழா கோலாகலம்

ஆடி மாதம் என்றாலே அம்மன்..! ஆடி மாதம் என்றாலே கூழ்..! அம்மன் கோயில்களில் கூழ் ஊற்றுவது ஏன்?

ஆடி முதல் செவ்வாய்!. குலசை முத்தாரம்மன் கோவிலில் திரளான பக்தர்கள் தரிசனம்!

Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram YouTube RSS
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
KoilgalKoilgal
Home»Featured»வெங்கடதாம்பட்டி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்!. 2000-க்கும் மேற்பட்டோர் தரிசனம்!
Featured

வெங்கடதாம்பட்டி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்!. 2000-க்கும் மேற்பட்டோர் தரிசனம்!

Editor web3By Editor web3June 4, 2026Updated:June 4, 2026No Comments1 Min Read
Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
Follow Us
Facebook X (Twitter) Instagram YouTube
uthangarai mariyamman kumbhabhishegam
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த வெங்கடதாம்பட்டி கிராமத்தில் புதிதாக புனரமைக்கப்பட்ட ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தின் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக பெருவிழா இன்று பக்தி பரவசத்துடன் நடைபெற்றது.

வெங்கடதாம்பட்டி கிராமத்தின் மையப்பகுதியில் வீற்றிருக்கும் பழமை வாய்ந்த மாரியம்மன் ஆலயத்தைப் புதுப்பிக்க கிராம மக்கள் முடிவு செய்தனர். அதன்படி, திருப்பணிகள் அனைத்தும் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு, கோவில் கோபுரங்கள் மற்றும் பிரகாரங்கள் புதிய பொலிவுடன் கட்டியெழுப்பப்பட்டதைத் தொடர்ந்து இந்த ஆன்மீக விழா அரங்கேறியது.

மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, கணபதி வழிபாட்டுடன் யாகசாலை பூஜைகள் முறைப்படி தொடங்கின. இரண்டு காலங்களாக நடைபெற்ற இந்த யாக வேள்வியில் விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, நவக்கிரக ஹோமம் மற்றும் வாஸ்து சாந்தி உள்ளிட்ட விசேஷ பூஜைகள் நடத்தப்பட்டு, மகா பூர்ணாஹுதி தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அப்பகுதி பெண்கள் முளைப்பாரி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

இதனைத் தொடர்ந்து, மங்கள வாத்தியங்கள் மற்றும் வேத மந்திரங்கள் முழங்க, வானில் கருடன் வட்டமிட, சிவாச்சாரியார்கள் புனித நீர் அடங்கிய கலசங்களை ஏந்தி வந்தனர். பின்னர் ஆலயத்தின் விமானக் கலசங்கள் மற்றும் மூலவர் மாரியம்மனுக்குப் புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் விமரிசையாக நடத்தப்பட்டது. அப்போது அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.

இந்த விழாவில் வெங்கடதாம்பட்டி, புதூர், சோலகாப்பட்டி, படப்பள்ளி, புதுக்காடு, காந்திநகர் மற்றும் ஊத்தங்கரை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த கோம்பு குலதெய்வ பங்காளிகளும், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து வருகை தந்த இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களும் கலந்துகொண்டு அம்மனைத் தரிசித்தனர்.

விழாவிற்கான விரிவான ஏற்பாடுகளை வெங்கடதாம்பட்டி ஊர் பொதுமக்களும் விழா குழுவினரும் ஒருங்கிணைந்து செய்திருந்தனர். மேலும், விழாவில் பங்கேற்ற ஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும் மதிய உணவு மற்றும் பிரசாதங்கள் கோவில் நிர்வாகத்தின் சார்பில் வழங்கப்பட்டன.

Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
Previous Articleஏரிக்கரை முனீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக பெருவிழா!. பக்தி பரவசத்துடன் பக்தர்கள் தரிசனம்!
Next Article கோவை : மகாலட்சுமி கோயிலில் வினோத வழிபாடு..! தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்..!
Editor web3
  • Website

Related Posts

அண்ணாமலையார் கோவிலில் 166-வது சுந்தரமூர்த்தி நாயனார் பெருவிழா கோலாகலம்

July 22, 2026

ஆடி மாதம் என்றாலே அம்மன்..! ஆடி மாதம் என்றாலே கூழ்..! அம்மன் கோயில்களில் கூழ் ஊற்றுவது ஏன்?

July 22, 2026

ஆடி முதல் செவ்வாய்!. குலசை முத்தாரம்மன் கோவிலில் திரளான பக்தர்கள் தரிசனம்!

July 21, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Ads
ADS
Latest Posts

அண்ணாமலையார் கோவிலில் 166-வது சுந்தரமூர்த்தி நாயனார் பெருவிழா கோலாகலம்

ஆடி மாதம் என்றாலே அம்மன்..! ஆடி மாதம் என்றாலே கூழ்..! அம்மன் கோயில்களில் கூழ் ஊற்றுவது ஏன்?

ஆடி முதல் செவ்வாய்!. குலசை முத்தாரம்மன் கோவிலில் திரளான பக்தர்கள் தரிசனம்!

சுந்தரமூர்த்தி நாயனார் – பரவைநாச்சியார் திருக்கல்யாணம்! 3,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம்!

விழாக்கோலம் பூண்ட மதுரை.. அழகர் கோவிலில் ஆடிப்பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்..!!

Trending Posts

அண்ணாமலையார் கோவிலில் 166-வது சுந்தரமூர்த்தி நாயனார் பெருவிழா கோலாகலம்

July 22, 2026

ஆடி மாதம் என்றாலே அம்மன்..! ஆடி மாதம் என்றாலே கூழ்..! அம்மன் கோயில்களில் கூழ் ஊற்றுவது ஏன்?

July 22, 2026

ஆடி முதல் செவ்வாய்!. குலசை முத்தாரம்மன் கோவிலில் திரளான பக்தர்கள் தரிசனம்!

July 21, 2026

சுந்தரமூர்த்தி நாயனார் – பரவைநாச்சியார் திருக்கல்யாணம்! 3,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம்!

July 21, 2026

விழாக்கோலம் பூண்ட மதுரை.. அழகர் கோவிலில் ஆடிப்பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்..!!

July 21, 2026
Facebook X (Twitter) Instagram YouTube RSS
  • Home
  • About us
  • Privacy Policy
  • Contact us
© 2026 TN Talks.

Type above and press Enter to search. Press Esc to cancel.