Close Menu
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
What's Hot

ஆடி செவ்வாய் சிறப்பு: நொய்யல் பகுதி முருகன் கோவில்களில் திரளான பக்தர்கள் தரிசனம்

ஆடித்தபசு விழா கோலாகலம்: கோமதி அம்மனுக்கு சங்கரநாராயணர் காட்சி

திருப்பத்தூர் : முத்துமாரியம்மன் கோயிலில் ஆடித் திருவிழா கொண்டாட்டம்..! புதிய கொடி மரத்திற்கு சிறப்பு பூஜை..!

Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram YouTube RSS
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
KoilgalKoilgal
Home»Featured»கோவை : மகாலட்சுமி கோயிலில் வினோத வழிபாடு..! தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்..!
Featured

கோவை : மகாலட்சுமி கோயிலில் வினோத வழிபாடு..! தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்..!

Editor 4 webBy Editor 4 webJune 5, 2026No Comments1 Min Read
Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
Follow Us
Facebook X (Twitter) Instagram YouTube
IMG 20260605 WA0075
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

கோவை அருகே தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் வினோத நேர்த்திக்கடன் செலுத்தினர். இதன் மூலம் தங்களது தலையெழுத்து மாறும் என நம்புவதாக அவர்கள் தெரிவித்தனர்.

கோவை மாவட்டம் சூலூர் அடுத்த பள்ளபாளையம் பேரூராட்சி பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற மகாலட்சுமி அம்மன் கோவிலில், பக்தர்களின் தலையில் தேங்காய் உடைக்கும் நூதன நேர்த்திக்கடன் வழிபாடு வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.

பள்ளபாளையத்தில் உள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த மகாலட்சுமி அம்மன் கோவிலின் மூன்றாம் ஆண்டு முப்பெரும் விழா நடைபெற்று வருகிறது. இவ்விழாவின் துவக்கமாக அம்மனுக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகங்களும், அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து அம்மனின் திருக்கல்யாண வைபவமும் விமரிசியாக நடத்தப்பட்டது.

விழாவின் முக்கிய நிகழ்வான தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தும் வழிபாடு இன்று நடைபெற்றது. மேளதாளங்கள் முழங்க, பக்திப் பரவசத்தில் அருள் வந்து ஆடியவாறு வந்த கோவில் பூசாரி, பூஜை செய்யப்பட்ட தேங்காய்களை வரிசையாக அமர்ந்திருந்த நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்களின் தலையிலும் சடாரென உடைத்தார். பின்னர், தலையில் தேங்காய் உடைத்துக்கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பூசாரி சாட்டையடி நேர்த்திக்கடனையும் நிறைவேற்றினார். காண்போரை மெய்சிலிர்க்க வைக்கும் இந்த வினோத வழிபாட்டினை சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் வியப்புடன் பார்த்துச் சென்றனர்.

Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
Previous Articleவெங்கடதாம்பட்டி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்!. 2000-க்கும் மேற்பட்டோர் தரிசனம்!
Next Article புதுச்சேரி: தூய இருதய ஆண்டவர் பசிலிக்கா 119-வது ஆண்டு பெருவிழா..!! கொடியேற்றம் கோலாகலம்..!!
Editor 4 web

Related Posts

ஆடி செவ்வாய் சிறப்பு: நொய்யல் பகுதி முருகன் கோவில்களில் திரளான பக்தர்கள் தரிசனம்

July 28, 2026

ஆடித்தபசு விழா கோலாகலம்: கோமதி அம்மனுக்கு சங்கரநாராயணர் காட்சி

July 28, 2026

திருப்பத்தூர் : முத்துமாரியம்மன் கோயிலில் ஆடித் திருவிழா கொண்டாட்டம்..! புதிய கொடி மரத்திற்கு சிறப்பு பூஜை..!

July 28, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Ads
ADS
Latest Posts

ஆடி செவ்வாய் சிறப்பு: நொய்யல் பகுதி முருகன் கோவில்களில் திரளான பக்தர்கள் தரிசனம்

ஆடித்தபசு விழா கோலாகலம்: கோமதி அம்மனுக்கு சங்கரநாராயணர் காட்சி

திருப்பத்தூர் : முத்துமாரியம்மன் கோயிலில் ஆடித் திருவிழா கொண்டாட்டம்..! புதிய கொடி மரத்திற்கு சிறப்பு பூஜை..!

திருவண்ணாமலையில் ஆடி பவுர்ணமி கிரிவலம்: உகந்த நேரம் என்ன?!

சிறுவாபுரியில்  இருந்து தொடங்கியது 108 வேல் யாத்திரை…  போதைப் பொருட்களுக்கு எதிராக ஒரு ஆன்மீக நடவடிக்கை

Trending Posts

July 27, 2026

சிறுவாபுரியில்  இருந்து தொடங்கியது 108 வேல் யாத்திரை…  போதைப் பொருட்களுக்கு எதிராக ஒரு ஆன்மீக நடவடிக்கை

July 27, 2026
Facebook X (Twitter) Instagram YouTube RSS
  • Home
  • About us
  • Privacy Policy
  • Contact us
© 2026 TN Talks.

Type above and press Enter to search. Press Esc to cancel.