எதிரிகள் மற்றும் உங்களுக்கு எதிராகச் சதி செய்தவர்கள் தானாகவே பின்வாங்குவார்கள். வழக்கு அல்லது கோர்ட் விவகாரங்களில் உங்களுக்குச் சாதகமான தீர்ப்பு வர வாய்ப்புள்ளது. கடன் சுமை குறையப் புதிய வழிகள் பிறக்கும். பழைய நீண்ட கால நோய்களுக்கு நல்ல மருத்துவரும், தகுந்த மருந்தும் கிடைத்து உடல்நிலை தேறும். ஆரோக்கியம் மேம்படும். குடும்பத்தில் இருந்த மனஸ்தாபங்கள் நீங்கி ஒற்றுமை பலப்படும். அலுவலகத்தில் உங்கள் வேலைகள் அனைத்தும் தடையின்றி முடியும். புதிய தொழில் தொடங்க எடுக்கும் முயற்சிகள் வெற்றியை நோக்கி நகரும்.
பரிகாரம்: அனுமன் சாலிசா படிப்பது தைரியத்தை தரும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 3, 9
