Close Menu
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
What's Hot

இன்று கார்த்திகை விரதம் 2026 ஜூன்..!! அப்பன் முருகனிடம் இதை கேளுங்க..!!

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனித் திருமஞ்சன விழா – கொடியேற்றத்துடன் தொடக்கம்

சக்தி பீடங்களின் சிகரம்: ஞானத்தையும், வெற்றியையும் தரும் கொல்லூர் மூகாம்பிகை!

Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram YouTube RSS
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
KoilgalKoilgal
Home»Featured»7-ம் பாவகம் சொல்லும் ரகசியம் என்ன?
Featured

7-ம் பாவகம் சொல்லும் ரகசியம் என்ன?

Editor web1By Editor web1June 5, 2026No Comments4 Mins Read
Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
Follow Us
Facebook X (Twitter) Instagram YouTube
WhatsApp Image 2026 06 03 at 12.07.42 PM 1
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

ஜோதிடத்தில் 7-ம் பாவகம் என்பது “களத்திர ஸ்தானம்” என்று அழைக்கப்படுகிறது. ஒருவருக்கு திருமணம் சார்ந்த கேள்விகளுக்கு 7-ம்  பாவகத்தில் இருந்து பெறலாம். நண்பர்கள் தொடர்பு, சமூக சூழல்நிலை பற்றியும் 7-ம் பாவகத்தில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.

7-ம் பாவகத்தின் விரிவான காரகங்கள்:

ஜாதகருக்கு திருமணம் எப்போது நடக்கும், காதல் திருமணமா அல்லது வீட்டார் பார்த்து வைக்கும் நிச்சயித்த திருமணமா, தாம்பத்திய சுகம் எவ்வாறு இருக்கும் என்பதை 7-ம் பாவகம் தான் தீர்மானிக்கிறது. துணையின் தோற்றம், குணம், நிறம் குறித்தும் 7-ம் விளக்கும். தொழிலில் கூட்டாளிகள் அமைவார்களா, அவர்களால் லாபம் கிடைக்குமா அல்லது ஏமாற்றம் மிஞ்சுமா என்பதைக் காட்டும். அரசியல்வாதிகள், நடிகர்கள், தொழிலதிபர்கள் போன்றோருக்கு மக்கள் மத்தியில் இருக்கும் செல்வாக்கைக் குறிக்கும் இடம்.

7-ம் பாவகத்தின் சாதகங்கள்:

7-ம் பாவகம் வலுவாகவும், சுப கிரகங்களின் ஆதிக்கத்திலும் இருந்தால் வாழ்க்கைத் துணையின் உதவி மிகச்சிறப்பாக இருக்கும். லக்னத்திற்கு 7-ல் குரு, சுக்கிரன் அல்லது வளர்பிறை சந்திரன் போன்ற சுப கிரகங்கள் இருந்தால், குணத்திலும் அழகிலும் சிறந்த துணை அமைவார். திருமணத்திற்குப் பின்பு ஜாதகரின் அந்தஸ்து உயரும். 7-ம் வீடு பலம் பெற்றவர்கள் மக்கள் பிரதிநிதியாகவோ அல்லது பெரிய அமைப்புகளுக்குத் தலைவராகவோ ஜொலிப்பார்கள். தொழில் கூட்டாளிகள் விசுவாசமாக இருப்பார்கள். கூட்டுத் தொழில் மூலம் சர்வதேச அளவில் புகழடையலாம்.

7-ம் பாவகத்தின் பாதகங்கள்:

7-ல் செவ்வாய், ராகு, கேது அல்லது சூரியன் போன்ற கிரகங்கள் அமர்ந்து, சுப பார்வை பெறாமல் போனால் திருமணத்தில் தடை அல்லது திருமண பந்தத்தில் முறிவு (Divorce) ஏற்பட வாய்ப்பு உள்ளது. 7-ம் அதிபதி 6, 8, 12 ஆகிய மறைவு பாவகங்களுக்கு சென்றால், கூட்டாளிகளால் பண இழப்பு ஏற்படு வாய்ப்பு உள்ளது. இல்லையென்றால், நீதிமன்ற வழக்குகள், அவமானங்களைச் சந்திக்க நேரிடும்.

ஜோதிட விதிகளின்படி 2 மற்றும் 7-ம் வீடுகள் ‘மாரக ஸ்தானங்கள்’ ஆகும். ஜாதகரின் இறுதி காலத்தில் (ஆயுள் முடியும் தசா புத்திகளில்) இந்த 7-ம் வீடு உடல்நலக் குறைவையோ அல்லது மரண கண்டத்தையோ தரக்கூடிய பாதகத்தை உடையது. ஒருவருக்கு 7-ம் பாவகம் என்பது நேர் எதிரே உள்ள பாவகம் ஆகும். அங்கு அமரும் கிரகங்கள் ஜாதகரின் வாழ்க்கைத் துணை, கூட்டுத் தொழில் கூட்டாளிகள் மற்றும் சமூகத் தொடர்புகளை நேரடியாகத் தீர்மானிக்கின்றன.

9 கிரகங்கள் 7ம் பாவகத்தில் நின்ற பலன்கள்:

சூரியன்: 7-ம் வீட்டில் சூரியன் அமர்வது பொதுவாக ‘திக்கற்ற’ நிலை (இழப்பு) எனப்படும். வாழ்க்கைத் துணை நல்ல குலத்திலோ, அரசுப் பணியிலோ அல்லது அதிகாரமிக்க பதவியிலோ இருப்பார். கம்பீரமான தோற்றமும், நிர்வாகத் திறனும் கொண்டவராக இருப்பார். சூரியன் ஒரு நெருப்பு கிரகம் என்பதால், கணவன்- மனைவி இடையே ஈகோ மற்றும் அடிக்கடி கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுத்துச் செல்வது மிகவும் நல்லது. சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் இருக்கும். கூட்டுத் தொழிலில் கூட்டாளிகளுடன் அதிகாரப் போட்டி ஏற்பட வாய்ப்புள்ளது.

சந்திரன்: மனதை குறிக்கும் மனோகாரகனான சந்திரன் 7-ம் பாவகத்தில் அமர்வது ஒரு சுப அமைப்பாகும். மிகவும் அழகான, கனிவான வார்த்தைகளைப் பேசும், அமைதியான வாழ்க்கைத் துணை அமைவார். கலை, இலக்கியம் அல்லது உணவகத் துறையில் ஆர்வம் கொண்டவராக இருக்கலாம். தம்பதிக்குள் அதிக பாசமும் அன்யோன்யமும் இருக்கும். சந்திரன் தேய்பிறையாகவோ அல்லது பாதிக்கப்பட்டோ இருந்தால், வாழ்க்கைத் துணையின் மனநிலையில் அடிக்கடி மாற்றங்கள் மற்றும் தேவையற்ற கவலைகள் ஏற்படலாம். மக்கள் தொடர்பு மிகச்சிறப்பாக இருக்கும். நீர் சார்ந்த தொடர்பு உடைய தொழில்கள் (திரவப் பொருட்கள், பால், ஏற்றுமதி- இறக்குமதி) லாபம் தரும்.

செவ்வாய்: 7-ல் செவ்வாய் இருப்பது ‘செவ்வாய் தோஷத்தை’ ஏற்படுத்துகிறது. வாழ்க்கைத் துணை மிகுந்த தைரியசாலி, சுறுசுறுப்பானவர் மற்றும் நேர்மையானவராக இருப்பார். பாதுகாப்புத் துறை (காவல், ராணுவம்) அல்லது பொறியியல் துறையைச் சேர்ந்தவராக இருக்க வாய்ப்பு உள்ளது. சிறு விஷயங்களுக்குக் கூட தம்பதியருக்குள் பெரிய வாக்குவாதங்கள் ஏற்படலாம். அதே செவ்வாய் தோஷம் உள்ள ஒருவரைத் திருமணம் செய்வதன் மூலம் இந்தத் தோஷம் நிவர்த்தியாகும். ரியல் எஸ்டேட், பூமி, கட்டுமானம் சார்ந்த கூட்டுத்தொழில் லாபம் தரும். கணக்கு வழக்குகளில் மிகவும் எச்சரிக்கை தேவை.

புதன்: புதன் பகவான் 7-ம் பாவகத்தில் இருப்பது மிகச்சிறந்த தர்க்க மற்றும் வியாபார ஞானத்தைத் தரும். துணை வயதில் இளமையான தோற்றம் கொண்டவராகவும், மிகச்சிறந்த புத்திசாலியாகவும், நகைச்சுவை உணர்வு மிக்கவராகவும் இருப்பார். கணக்கு, கணினி, எழுத்து அல்லது ஆசிரியர் பணியில் இருக்கலாம். தம்பதிக்குள் நல்ல புரிதல் இருக்கும். நண்பர்களைப் போல பழகிக் கொள்வார்கள். கருத்து வேறுபாடுகளை பொறுமையுடன் பேசி தீர்த்துக் கொள்வார்கள். கூட்டு வியாபாரத்திற்கு 7-ம் பாவகத்தில் புதன் பகவான் இருப்பது ஒரு அற்புதமான அமைப்பு. கமிஷன், முகவர் மற்றும் தகவல் தொடர்புத் தொழில்கள் நல்ல லாபத்தை தரும்.

குரு: “குரு ஏழில் இருந்தால் கோடி நன்மை” என்பது பழமொழி. 7-ம் பாவக்தில் குரு அமர்ந்து லக்னத்தைப் பார்ப்பது ஜாதகருக்குப் பெரும் நற்பலன்களைத் தரும். உயர்ந்த குணமும், தெய்வீக பக்தியும், பாரம்பரியமிக்க குடும்பப் பின்னணியும் கொண்ட வாழ்க்கைத் துணை அமைவார்கள். பெரியோர்களை மதிக்கும் பண்பு இருக்கும். மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை அமையும். திருமணத்திற்குப் பிறகு ஜாதகரின் பொருளாதார நிலை, சமுதாய அந்தஸ்து மற்றும் பாக்கியங்கள் பல மடங்கு உயரும். சமுதாயத்தில் கவுரவம் உயரும். நிதி, வங்கி, கல்வி நிறுவனங்கள் சார்ந்த தொழில் அல்லது கூட்டுத்தொழில் ஜாதகருக்கு சிறப்பாக இருக்கும்.

சுக்ரன்: களத்திர காரகனான சுக்கிரன் 7-ம் பாவகத்தில் இருப்பது ஜோதிடத்தில் ‘காரகோ பாவ நாஸ்தி’ என அழைக்கப்படுகிறது. வாழ்க்கைத் துணை அதீத அழகு, கவர்ச்சி மற்றும் கலைநயம் கொண்டவராக இருப்பார். நவீன ஆடைகள், ஆபரணங்கள் மற்றும் ஆடம்பரப் பிரியராக இருப்பார். அதீத காதலும் சிற்றின்ப சுகமும் இருக்கும். இருப்பினும், காரகோ பாவ நாஸ்தி விதியின்படி, சுக்கிரன் பகவாடன பலவீனம் அடைந்து இருந்தால், தாம்பத்தியத்தில் திருப்தியின்மை அல்லது திருமணத்தில் தடைகள்,  தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. கலை, சினிமா, ஆடை, அலங்கார, ஆபரணத் தொழில் மற்றும் பெண்களை வாடிக்கையாளர்களாகக் கொண்ட வணிகம் ஜாதகருக்கு சிறப்பாக அமையும்.

சனி: 7-ம் பாவகத்தில் சனி பகவான் திக்பலம் பெறுவார். முயற்சிகளில் சில நேரங்களில் தாமதங்களை ஏற்படுத்துவார். வாழ்க்கைத் துணை மிகவும் முதிர்ச்சியான சிந்தனை கொண்டவராக, கடமை உணர்வு கொண்டவராக மற்றும் கடினமான உழைப்பாளியாக இருப்பார். ஜாதகரை விட வயதில் மூத்தவராகவோ அல்லது பார்ப்பதற்கு வயது முதிர்ந்த தோற்றம் கொண்டவராகவோ இருக்கலாம். திருமணம் தாமதமாக நடக்கும். தம்பதிக்குள் காதல் வெளிப்பாடு குறைவாக இருந்தாலும், தாம்பத்திய உறவில் நிலையான தன்மையும், விசுவாசமும் இருக்கும். இரும்பு, இயந்திரங்கள், கனிமங்கள் மற்றும் உழைப்பு சார்ந்த கூட்டுத் தொழில்கள் சாதகமாக இருக்கும்.

ராகு: ராகு 7-ம் பாவகத்தில் அமர்வது வாழ்க்கைத் துணை பிடிவாத குணம் கொண்டவராகவோ அல்லது தீவிர கற்பனை சக்தி, கற்பனை உலகை சிந்திக்க் கூடியவராக இருப்பார். சாதி, மதம் கடந்த கலப்புத் திருமணம், வேற்று மாநிலத்து அல்லது வெளிநாட்டுத் துணை அமைய அதிக வாய்ப்புகள் உண்டு. ராகு அசுபத்துவம் பெற்றால், தம்பதிக்குள் தேவையற்ற சந்தேகங்களும், ரகசியங்களும் மனக்கசப்பை உண்டாக்கலாம். வெளிநாட்டை சேர்ந்தவர்களுடன் கூட்டுத்தொழில் செய்தல், ஆன்லைன் வர்த்தகம் மற்றும் இறக்குமதி தொழில்கள் மூலம் பிரம்மாண்ட லாபம் ஏற்படும்.

கேது: ஞானகாரகனான கேது பகவான் 7-ம் பாவகத்தில் இருப்பது உலகியல் வாழ்க்கைக்குச் சற்று சவாலானதாக அமைப்பாக பார்க்கப்படுகிறது. வாழ்க்கைத் துணை மிகவும் சாதுவானவராக, ஆன்மிக நாட்டம் கொண்டவராக, ஆடம்பரங்களை விரும்பாதவராக இருப்பார். திருமண வாழ்க்கையில் பெரிய ஈடுபாடு இல்லாமை, தம்பதிக்குள் ஒருவித பற்றின்மை அல்லது தனிமை உணர்வு ஏற்பட வாய்ப்புள்ளது. கூட்டுக்குடும்பத்தில் வாழ விரும்பாமல் தனிக்குடித்தனம் போகும் எண்ணம் மேலோங்கும். ஆன்மிகம், ஜோதிடம், மருத்துவம் சார்ந்த தொழில்கள் ஜாதகருக்கு சாதகமாக இருக்கும். கூட்டுத்தொழில் செய்தால், மற்றவர்களை எளிதில் நம்பி ஏமாறும் சூழல் அமையும் என்பதால், தனியாக தொழில் செய்வதே நல்லது.

Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
Previous Articleபுதுச்சேரி: தூய இருதய ஆண்டவர் பசிலிக்கா 119-வது ஆண்டு பெருவிழா..!! கொடியேற்றம் கோலாகலம்..!!
Next Article தொழில் அமையும் காலம் எப்போது?, என்னென்ன தொழில்கள் செய்யலாம்!
Editor web1
  • Website

Related Posts

இன்று கார்த்திகை விரதம் 2026 ஜூன்..!! அப்பன் முருகனிடம் இதை கேளுங்க..!!

June 13, 2026

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனித் திருமஞ்சன விழா – கொடியேற்றத்துடன் தொடக்கம்

June 13, 2026

சக்தி பீடங்களின் சிகரம்: ஞானத்தையும், வெற்றியையும் தரும் கொல்லூர் மூகாம்பிகை!

June 12, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Ads
ADS
Latest Posts

இன்று கார்த்திகை விரதம் 2026 ஜூன்..!! அப்பன் முருகனிடம் இதை கேளுங்க..!!

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனித் திருமஞ்சன விழா – கொடியேற்றத்துடன் தொடக்கம்

சக்தி பீடங்களின் சிகரம்: ஞானத்தையும், வெற்றியையும் தரும் கொல்லூர் மூகாம்பிகை!

800 ஆண்டுகள் பழமையான கால பைரவர் கோயிலில் தேய்பிறை அஸ்டமி..! சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் பங்கேற்பு..!

இன்றைய (11.06.2026) ராசி பலன் – மேஷம்

Trending Posts

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனித் திருமஞ்சன விழா – கொடியேற்றத்துடன் தொடக்கம்

June 13, 2026

இன்று கார்த்திகை விரதம் 2026 ஜூன்..!! அப்பன் முருகனிடம் இதை கேளுங்க..!!

June 13, 2026

சக்தி பீடங்களின் சிகரம்: ஞானத்தையும், வெற்றியையும் தரும் கொல்லூர் மூகாம்பிகை!

June 12, 2026

800 ஆண்டுகள் பழமையான கால பைரவர் கோயிலில் தேய்பிறை அஸ்டமி..! சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் பங்கேற்பு..!

June 12, 2026

இன்றைய (11.06.2026) ராசி பலன் – மேஷம்

June 11, 2026
Facebook X (Twitter) Instagram YouTube RSS
  • Home
  • About us
  • Privacy Policy
  • Contact us
© 2026 TN Talks.

Type above and press Enter to search. Press Esc to cancel.