Close Menu
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
What's Hot

ஆடி முதல் செவ்வாய்!. குலசை முத்தாரம்மன் கோவிலில் திரளான பக்தர்கள் தரிசனம்!

சுந்தரமூர்த்தி நாயனார் – பரவைநாச்சியார் திருக்கல்யாணம்! 3,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம்!

விழாக்கோலம் பூண்ட மதுரை.. அழகர் கோவிலில் ஆடிப்பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்..!!

Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram YouTube RSS
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
KoilgalKoilgal
Home»Featured»திருச்சி: ஸ்ரீ மகாமாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் கோலாகலம்!
Featured

திருச்சி: ஸ்ரீ மகாமாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் கோலாகலம்!

Editor web2By Editor web2July 2, 2026Updated:July 2, 2026No Comments1 Min Read
Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
Follow Us
Facebook X (Twitter) Instagram YouTube
vlcsnap 2026 07 02 20h12m15s165
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

திருச்சி மாவட்டம், தொட்டியம் தாலுகா, எம். புத்தூர் ஊராட்சி சத்திரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மகாமாரியம்மன் திருக்கோயிலில் மகா கும்பாபிஷேக விழா இன்று வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

திருக்கோயிலில் நடைபெற்ற திருப்பணிகள் மற்றும் புதிய மண்டபங்கள் அமைக்கும் பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, ஸ்ரீ மகாமாரியம்மன், தக்ஷிணாமூர்த்தி, பாலமுருகன், வைஷ்ணவி, மகேஸ்வரி, வேம்படி கருப்பண்ணசாமி உள்ளிட்ட தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

vlcsnap 2026 07 02 20h12m04s503

கும்பாபிஷேக விழாவையொட்டி கடந்த ஜூன் 18-ஆம் தேதி யாகசாலை அமைக்கும் நிகழ்வுடன் விழா தொடங்கியது. தீர்த்தக்குடம் எடுத்துவருதல், முதல் கால யாகசாலை பூஜை உள்ளிட்ட நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து, தினமும் சிறப்பு ஹோமங்கள் மற்றும் யாக பூஜைகள் நடைபெற்றன.

இன்று யாகசாலை பூஜைகள் நிறைவடைந்த பின்னர், திருக்குடங்கள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, கோயில் கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து ஸ்ரீ மகாமாரியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.

vlcsnap 2026 07 02 20h11m59s007

இந்த விழாவில் காட்டுப்புத்தூர், தொட்டியம், ஸ்ரீராமசமுத்திரம், சின்னபள்ளிபாளையம், பெரியபள்ளிபாளையம், சீலைபிள்ளையார்புத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

விழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது.

MahaKumbabishekam MariammanTemple Trichy
Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
Previous Articleநாகை : பிச்சைக்கொடை ஐய்யனார் கோயிலில் குடமுழுக்கு கோலாகலம்..! ஆயிரக்கணக்கானோர் சுவாமி தரிசனம்..!
Next Article நாமக்கல் : உலகில் இல்லாத அளவில் சிறப்பு கொண்ட கோயில் பற்றி தெரியுமா? சுமங்கலி மாரியம்மன் வழிபாடு..!
Editor web2
  • Website

Related Posts

ஆடி முதல் செவ்வாய்!. குலசை முத்தாரம்மன் கோவிலில் திரளான பக்தர்கள் தரிசனம்!

July 21, 2026

சுந்தரமூர்த்தி நாயனார் – பரவைநாச்சியார் திருக்கல்யாணம்! 3,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம்!

July 21, 2026

விழாக்கோலம் பூண்ட மதுரை.. அழகர் கோவிலில் ஆடிப்பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்..!!

July 21, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Ads
ADS
Latest Posts

ஆடி முதல் செவ்வாய்!. குலசை முத்தாரம்மன் கோவிலில் திரளான பக்தர்கள் தரிசனம்!

சுந்தரமூர்த்தி நாயனார் – பரவைநாச்சியார் திருக்கல்யாணம்! 3,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம்!

விழாக்கோலம் பூண்ட மதுரை.. அழகர் கோவிலில் ஆடிப்பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்..!!

திருப்பதி : ஒரே நாளில் 90,000 பக்தர்கள்..! ஏழுமலையானை நோக்கி குவியும் மக்கள்..!

இன்றைய (21.07.2026) ராசி பலன் – மேஷம்

Trending Posts

ஆடி முதல் செவ்வாய்!. குலசை முத்தாரம்மன் கோவிலில் திரளான பக்தர்கள் தரிசனம்!

July 21, 2026

சுந்தரமூர்த்தி நாயனார் – பரவைநாச்சியார் திருக்கல்யாணம்! 3,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம்!

July 21, 2026

விழாக்கோலம் பூண்ட மதுரை.. அழகர் கோவிலில் ஆடிப்பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்..!!

July 21, 2026

திருப்பதி : ஒரே நாளில் 90,000 பக்தர்கள்..! ஏழுமலையானை நோக்கி குவியும் மக்கள்..!

July 21, 2026

இன்றைய (21.07.2026) ராசி பலன் – மேஷம்

July 21, 2026
Facebook X (Twitter) Instagram YouTube RSS
  • Home
  • About us
  • Privacy Policy
  • Contact us
© 2026 TN Talks.

Type above and press Enter to search. Press Esc to cancel.