Author: Editor TN Talks

தவெக வளர்ந்து வரும் கட்சியாக உள்ளதால், அதன் தலைமையில் 2026 தேர்தலில் மெகா கூட்டணி அமைந்தால் மிருக பலத்துடன் இருக்கும் திமுகவை வீழ்த்தி விடலாம் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் யோசனை தெரிவித்தார். திருப்பூர் மாவட்ட அமமுக சார்பில் தெற்கு தொகுதி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கல்லூரி சாலையில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், நிர்வாகிகளிடம் பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர், செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறுகையில், “தேர்தல் வாக்குறுதிகளாக திமுக அளித்த 90 சதவீத வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. தமிழ்நாட்டில் சட்டம் – ஒழுங்கு சீர்குலைந்து போயிருக்கிறது. போதை பழக்கத்தால் கொலை, கொள்ளை போன்ற குற்றச்செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அப்படி இருந்தும், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக 39 தொகுதிகளில் வெற்றி பெற்றதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. உறுத்தலாகவே உள்ளது.…

Read More

நல்லதே நடக்கும்  திதி: பஞ்சமி மதியம் 2.29 வரை. பிறகு சஷ்டி. நட்சத்திரம்: ஆயில்யம் பின்னிரவு 2.21வரை. பிறகு மகம். நாமயோகம்: பிராம்யம் மாலை 4.57 வரை.பிறகு வைதிருதி. நாமகரணம்: தைதுலம் மதியம் 2.29 வரை. பிறகு கரசை. நல்ல நேரம்: காலை 8-9, நண்பகல் 12-1, இரவு 7-8. யோகம்: சித்தயோகம் நாள் முழுவதும். சூலம்: வடக்கு, வடமேற்கு காலை 10.48 வரை. சந்திராஷ்டமம்: உத்திராடம் சூரிய உதயம்: சென்னையில் காலை 6.19. அஸ்தமனம்: மாலை 5.42. ராகு காலம்: பிற்பகல் 3.00-4.30 எமகண்டம்: காலை 9.00-10.30 குளிகை: மதியம் 12.00-1.30 ராகு காலம்: பிற்பகல் 3.00-4.30 எமகண்டம்: காலை 9.00-10.30 குளிகை: மதியம் 12.00-1.30

Read More

மேஷம்: குழப்பம் நீங்கி குடும்பத்தில் நிம்மதி தங்கும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். பழைய கடனைத் தீர்க்க முயற்சிப்பீர். தேவைகள் பூர்த்தியாகும். வியாபாரத்தில் அலைச்சல் விலகும். அலுவலகரீதியாக வெளியூர் பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரும். ரிஷபம்: விடாப்பிடியாக செயல்பட்டு சில பணிகளை முடிப்பீர். தம்பதிக்குள் இருந்த ஈகோ பிரச்சினை தீரும். பணப் பற்றாக்குறை நீங்கும். வியாபாரம் சூடு பிடித்து லாபம் அதிகரிக்கும். அலுவலகத்தில் மேலதிகாரிகளை பகைத்துக் கொள்ள வேண்டாம். பொறுப்புகள் கூடும். மிதுனம்: நினைத்தது நிறைவேறும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். பணவரவு கூடும். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். வாகனம் செலவு வைக்கும். வியாபாரம், உத்தியோகத்தில் முன்னேற்றம் காண்பீர். கடகம்: வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். யாருக்கும் சாட்சி கையெழுத்திடாதீர்கள். மனைவியுடன் மனஸ்தாபங்கள் வரும். வியாபாரத்தில் அவசர முடிவு எடுக்க வேண்டாம். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலையுண்டு என்று இருக்க பழகிக் கொள்வது நல்லது. சிம்மம்: குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்.…

Read More

நல்லதே நடக்கும் 08.12.2025 விசுவாவசு 22 கார்த்திகை திங்கள்கிழமை திதி: சதுர்த்தி மாலை 4.04 மணி வரை, பிறகு பஞ்சமி. நட்சத்திரம்: பூசம் பின்னிரவு 2.51 வரை, பிறகு ஆயில்யம். நாமயோகம்: பிராம்யம் மாலை 4.57 வரை, பிறகு ஐந்திரம். நாமகரணம்: பாலவம் மாலை 4.04 வரை, பிறகு கௌலவம். நல்ல நேரம்: காலை 6.00-7.00, 9.00-10.30, மதியம் 1.00-2.00, மாலை 3.00-4.00, 6.00-7.00. யோகம்: சித்தயோகம் இன்று நாள் முழுவதும். சூலம்: கிழக்கு, தென்மேற்கு காலை 9.12 வரை. சந்திராஷ்டமம்: பூராடம். சூரிய உதயம்: சென்னையில் காலை 6.19. அஸ்தமனம்: மாலை 5.42. ராகு காலம்: காலை 7.30-9.00 எமகண்டம்: காலை 10.30-12.00 குளிகை: மதியம் 1.30-3.00

Read More

எந்ததெந்த ராசிக்காரர்கள் ருத்திராட்சம் அணியலாம், யார்-யார் அணியக்கூடாது என தெரிந்து கொள்ளலாம். மேஷ ராசிக்காரர்களுக்கு ஒரு முகம் கொண்ட ருத்ராட்சம் மிகவும் சிறந்தது. இது தைரியம், தன்னம்பிக்கை, வெற்றி ஆகியவற்றை தருகிறது. மேலும், மூன்று முகம் அல்லது ஐந்து முகம் கொண்ட ருத்ராட்சத்தையும் அணிவது மங்களகரமானதாக கருதப்படுகிறது. ரிஷப ராசிக்காரர்களுக்கு நான்கு முகம், ஆறு முகம் மற்றும் 14 முகம் கொண்ட ருத்ராட்சம் மிகவும் சிறந்தது. இந்த ருத்ராட்சங்கள் அவர்களுக்கு அதிர்ஷ்டம், வெற்றி, செல்வம், ஆரோக்கியம் ஆகியவற்றை தருகிறது. மேலும், மன அமைதி, ஆரோக்கியம் ஆகியவற்றையும் மேம்படுத்துகிறது. கடக ராசிக்காரர்களுக்கு மூன்று அல்லது ஐந்து முகம் கொண்ட ருத்ராட்சம் மிகவும் சிறந்தது. இந்த ருத்ராட்சங்கள் அவர்களுக்கு வாழ்வில் இருந்த தடைகள் நீங்கி, வாழ்க்கை சிறப்பாக இருக்க உதவுகிறது. இது செல்வம், பதவி, புகழ் ஆகியவற்றை தருகிறது. மேலும், அறிவு, ஞானம் ஆகியவற்றையும் மேம்படுத்துகிறது. தனுசு ராசிக்காரர்களுக்கு ஒன்று, மூன்று அல்லது ஐந்து…

Read More

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய 12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள்..! மேஷம்:மேஷ ராசிக்காரர்களின் வாழ்க்கை முறையில் ஒரு சில மாற்றங்கள் ஏற்படலாம். உங்களை சுற்றி பதட்டமான சூழல் நிலவும். பிறருடன் பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சிறிய விஷயங்கள் கூட பெரிய பிரச்சனைகளுக்கு வழிவகுக்கலாம். பொறுமையாகவும், மரியாதையோடும் பிறருடைய உணர்வுகளை கையாளுங்கள். இன்றைய அனுபவம் உங்களுடைய உட்புற வலிமையை அடையாளம் காண்பதற்கு உங்களுக்கு உதவும்.அதிர்ஷ்ட எண்: 8அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு ரிஷபம்:ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான நாளாக இருக்கும். உங்களுடைய முயற்சிகளுக்கு ஏற்ற பலனை பெறுவீர்கள். நெருங்கியவர்கள் உடனான உறவு வலுவாகும். புதிய உறவுகள் துவங்குவதற்கு வாய்ப்புகள் உள்ளது. மனதில் இருக்கும் உணர்வுகளை வெளிப்படையாக காட்டுவது நெருக்கமானவர்களோடு மேலும் நெருங்குவதற்கு உதவியாக இருக்கும். உங்களுடைய பச்சாதாப உணர்வு பிறரை ஈர்க்கும். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் நேரம் செலவு…

Read More

மேஷம் : எந்த பிரச்சினையையும் எதிர்கொள்ளும் மனப் பக்குவம் கிட்டும். நல்லவர்கள் அறிமுகமாவர். குழப்பம் நீங்கி சுறுசுறுப்படைவீர். பிள்ளைகளின் சாதனைகளால் பெருமை அடைவீர். வியாபாரத்தில் நல்ல லாபமுண்டு. அலுவலகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டை பெறுவீர். ரிஷபம் : தன்னம்பிக்கையுடன் பொது காரியங்களில் ஈடுபடுவீர்கள். பிள்ளைகளின் விருப்பத்தை கேட்டறிந்து நிறைவேற்றுவீர்கள். வியாபாரரீதியாக பிரபலங்களை சந்திப்பீர்கள். உங்களின் சேமிப்பு மேலும் அதிகரிக்கும். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் தென்படும். மிதுனம் : உறவினர்களின் அன்புத் தொல்லை உண்டு. உங்களை சுற்றியிருப்பவர்களில் நல்லவர், கெட்டவர் யார் என்பதை உணர்வீர். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வியாபாரத்தை பெரிய அளவில் விரிவுபடுத்த முயற்சிப்பீர்கள். உத்தியோகத்தில் ஏற்றம் காண்பீர்கள். கடகம் : குடும்ப உறுப்பினர்களுடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர். யோகா, ஆன்மிகத்தில் நாட்டம் கூடும். பணவரவு உண்டு. மனைவிவழியில் ஆதாயம் கிட்டும். வியாபாரத்தில் தேங்கிக் கிடந்த சரக்குகள் விற்றுத் தீரும். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. சிம்மம் : பணவரவு உண்டு. கல்வியாளர், அறிஞர்களின் நட்பால் தெளிவடைவீர்கள்.…

Read More

மேஷம்: நீங்கள் அனைத்து விஷயங்களிலும் சுதந்திரமாக செயல்படுவீர்கள். இன்றைய தினம் முழுவதும் குடும்பம் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபடுவீர்கள். இளைஞர்கள் நண்பர்களுடன் வெளியில் சென்று நேரம் செலவிடுவீர்கள். ரிஷபம்: இன்றைய தினம் நீங்கள் அழகின் பால் ஈர்க்கப்படுவீர்கள். ரசிக்கும் உணர்வு அதிகம் இருக்கும். இதனால் சில முக்கியமான உறவுகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இந்த சூழ்நிலையை தவிர்க்க மனதிற்கு பிடித்தவர்களின் நிலையை புரிந்துகொண்டு செயல்பட வேண்டும். மிதுனம்: நீங்கள் அனைத்து விஷயங்களிலும் முடிவு எடுக்க சிரமப்படுவீர்கள். மன அழுத்தம் ஏற்படக்கூடும். அதனால் மன நிலையில் மாற்றம் ஏற்படும். குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் உங்கள் பிரச்சினைகளை கூறுவதன் மூலம் மன அழுத்தத்தில் இருந்து விடுபடலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கடகம்: உங்கள் கற்பனை திறன் அதிகரிக்கக்கூடும். உங்களின் கருத்துக்கள் சிறந்து விளங்கும். இதனால், கௌரவம் அதிகரிப்பதுடன், முயற்சிக்கு பாராட்டும் கிடைக்கும். படைப்பாற்றல் அதிகரிக்கும். காரிய சித்தி அடைய ஏற்ற நாளாக அமையலாம். சிம்மம்: இன்று உங்களுக்கு ஒரு சவாலான நாளாக இருக்கலாம்.…

Read More

மேஷம்: (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) கிரகநிலை- சுக ஸ்தானத்தில் குரு (வ) – பஞ்சம ஸ்தானத்தில் கேது – களத்திர ஸ்தானத்தில் புதன் – அஷ்டம ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், சுக்கிரன் – லாப ஸ்தானத்தில் சனி, ராகு – அயன சயன போக ஸ்தானத்தில் சந்திரன் – என கிரக நிலைகள் உள்ளன. பலன்கள்: எதைப் பறறியும் கவலைப்படாமல் நடப்பது நடக்கட்டும். எல்லாம் அவன் செயல் என்று எண்ணும் மேஷ ராசியினரே இந்த மாதம் நீண்ட நாட்களாக இழுத்து வந்த சுப பலன் உண்டாகும். எந்த ஒரு வேலையும் மன திருப்தியுடன் செய்வீர்கள். புத்தி சாதுரியமும், வாக்குவன்மையும் அதிகரிக்கும். முக்கிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். பண வரத்தை அதிகப்படுத்தும். தொழில், வியாபாரத்தை மாற்றலாமா என்ற எண்ணம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்க பெறுவார்கள். தொழில், வியாபாரத்தில் வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். வாகனங்கள் மூலம் லாபம்…

Read More

மேஷம்: நம்பிக்கைக்கு உரியவர்களை ஆலோசித்து சில முக்கிய முடிவுகள்எடுப்பீர். தம்பதிக்குள் அன்யோன்யம் கூடும். பழைய நண்பர்கள் வீடு தேடி வருவர். அடிக்கடி தொல்லை தந்த வாகனத்தை மாற்றுவீர். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர். உத்தியோகத்தில் ஏற்றமுண்டு. ரிஷபம்: பூர்வீக வீடு, மனை, விவசாய நிலப் பிரச்சினை தொடர்பாக அலைச்சல் இருக்கும். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து நடந்து கொள்ளவும். பிள்ளைகளால் செலவு ஏற்படும். வியாபாரத்தில் பழைய பாக்கிகளை போராடி வசூலிப்பீர். அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது. சிம்மம்: நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர். குழப்பம் நீங்கி குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வர். அக்கம் பக்கத்தினரின் அன்புத் தொல்லை நீங்கும். உத்தியோகம் சிறக்கும். வியாபாரத்தில் பணியாட்களின் ஆதரவுண்டு. கன்னி: எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். மகளுக்கு நல்லவரன் அமையும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. உறவினர்கள் உதவி நாடி வருவர். அலுவலகத்தில் நிம்மதியுண்டு. வியாபாரத்தில் புதிய யுக்திகளை கையாண்டு வாடிக்கையாளர்களை கவருவீர். துலாம்: குடும்ப உறுப்பினர்களிடம் விட்டுக் கொடுத்து…

Read More