Author: Editor TN Talks
கார்த்திகை தினத்தில் 27 நட்சத்திரங்களை குறிக்கும் வண்ணம் குறைந்தபட்சம் 27 தீபங்கள் ஏற்றலாம். தீபம் ஏற்றுவதற்கு அகல் விளக்குகள் மிகவும் சிறந்தது. கடைகளில் கிடைக்கும் செயற்கையான விளக்குகளை விடுத்து, மண் விளக்குகளை வாங்கி அதை சுத்தம் செய்ய வேண்டும். முதல் நாளே விளக்குகளை வாங்கி வந்து அதை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைத்து மறுநாள் சுத்தப்படுத்தி காயவிட வேண்டும். பின்னர் அவற்றிற்கு மஞ்சள் குங்குமம் வைத்து நல்லெண்ணெய் தீபமிட்டு வீடு முழுவதும் விளக்குகளை ஏற்றலாம். சமையலறை, படுக்கையறை, மொட்டை மாடி, நிலை வாசல் என்று அனைத்து இடங்களிலும் தீபம் வைக்க வேண்டும். தீபத்திருநாளன்று இத்தனை விளக்குகள் தான் ஏற்ற வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை. உங்களால் எத்தனை தீபம் ஏற்ற முடியுமோ அத்தனை தீபங்கள் ஏற்றலாம். பூஜை அறை, வாசல், கொல்லைப்புறம், துளசி மாடம், ஜன்னல்கள் என அனைத்து இடங்களிலும் 5,7,9,11 என்று ஒற்றைப்படை எண்ணிக்கையில் தீபம் ஏற்றலாம். வாசலின்…
கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, ‘கும்பேஸ்வரா கும்பேஸ்வரா’ என முழக்கமிட்டனர். கும்பகோணம் மகாமகம் தொடர்புடைய 12 சைவ கோயில்களில் முதன்மையானது மங்களாம்பிகா உடனாய ஆதிகும்பேஸ்வரர் கோயில். இக்கோயிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு, 2 ஆண்டுகளுக்கும் மேலாக திருப்பணிகள் நடைபெற்று வந்தன. பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து, கடந்த நவ.27-ம் தேதி யாகசாலை பூஜைகளுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. இந்நிலையில், 8 கால யாகசாலை பூஜைகளுக்குப் பின், நேற்று அதிகாலை 5 மணிக்கு பரிவார பூர்ணாஹூதியுடன் கடம் புறப்பாடாகி, சிவச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க, சிவவாத்தியங்கள் இசைக்க, காலை 6.38 மணிக்கு மூலவர், ராஜகோபுரம் உள்ளிட்ட அனைத்து கோபுர கலசங்களுக்கும் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது. அப்போது, ஆயிரக்கணக்கான பக்தர்கள் ‘கும்பேஸ்வரா… கும்பேஸ்வரா’ என விண்ணதிர முழக்கமிட்டனர். பின்னர் கலசங்களுக்கு மகா தீபம் காட்டப்பட்டது. விழாவில், காஞ்சி காமகோடி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்,…
நல்லதே நடக்கும் 02.12.2025 விசுவாவசு 16 கார்த்திகை செவ்வாய்க்கிழமை திதி: துவாதசி பிற்பகல் 3.58 வரை. பிறகு திரயோதசி. நட்சத்திரம்: அசுவினி இரவு 8.50 வரை. பிறகு பரணி. நாமயோகம்: வரீயான் இரவு 9.04 வரை. பிறகு பரிகம். நாமகரணம்: பாலவம் பிற்பகல் 3.58 வரை. பிறகு கௌலவம். நல்ல நேரம்: காலை 8-9, நண்பகல் 12-1, இரவு 7-8. யோகம்: சித்தயோகம் நாள் முழுவதும். சூலம்: வடக்கு, வடமேற்கு காலை 10.48 வரை. சந்திராஷ்டமம்: அஸ்தம். சூரிய உதயம்: சென்னையில் காலை 6.16. அஸ்தமனம்: மாலை 5.40 ராகு காலம்: பிற்பகல் 3.00-4.30 எமகண்டம்: காலை 9.00-10.30 குளிகை: மதியம் 12.00-1.30 நாள்: வளர்பிறை அதிர்ஷ்ட எண்: 1, 5 பரிகாரம்: பால் (தகவல்கள் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையிலானவை)
மேஷம்: பிள்ளைகளின் படிப்பு தொடர்பாக அலைச்சல், டென்ஷன் கூடும். குடும்ப உறுப்பினர்களிடம் விட்டுக் கொடுத்துப் போகவும். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து நடந்து கொள்ளவும். வியாபாரத்தில் போட்டி இருக்கும். அலுவலகத்தில் அடுத்தவர் பற்றி குறை கூற வேண்டாம். ரிஷபம்: எதிர்பார்த்த உதவி தக்க சமயத்தில் கிடைக்கும். தெளிவான முடிவுகளால் தொல்லைகள் நீங்கும். பூர்வீக சொத்து வழக்கில் உங்களுக்கு சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். அலுவலகத்தில் இழுபறியாக இருந்த பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மிதுனம்: குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு கூடும். சேமிக்கும் எண்ணம் மனதில் தோன்றும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். வியாபாரத்தில் வேற்றுமொழி, வேற்றுமத வாடிக்கையாளர்களால் ஆதாயம் உண்டு. அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் தென்படும். கடகம்: அரசு காரியங்களில் இருந்த தடைகள் விலகும். வெளிவட்டாரத் தொடர்பு அதிகரிக்கும். பயணங்கள் மகிழ்ச்சி தரும். யோகா, ஆன்மிகத்தில் நாட்டம் கூடும். வியாபாரத்தில் சரக்குகள் விற்றுத் தீரும். அலுவலகத்தில் நிம்மதியுண்டு. மேலதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர். சிம்மம்: ஒதுங்கியிருந்த உறவினர், நண்பர்கள் ஓடி வந்து பேசுவர்.…
நல்லதே நடக்கும் 01.12.2025 விசுவாவசு 15 கார்த்திகை திங்கள்கிழமை திதி: ஏகாதசி இரவு 7.02 மணி வரை, பிறகு துவாதசி. நட்சத்திரம்: ரேவதி இரவு 11.16 வரை, பிறகு அஸ்வினி. நாமயோகம்: வியதீபாதம் நள்ளிரவு 12.56 வரை, பிறகு வரீயான். நாமகரணம்: வணிசை காலை 8.21 வரை, பிறகு விஷ்டி. நல்ல நேரம்: காலை 6-7, 9-10.30, மதியம் 1-2, மாலை 3-4, 6-7. யோகம்: சித்தயோகம் இன்று நாள் முழுவதும். சூலம்: கிழக்கு, தென்மேற்கு காலை 9.12 வரை. சந்திராஷ்டமம்: உத்திரம் சூரிய உதயம்: சென்னையில் காலை 6.15. அஸ்தமனம்: மாலை 5.40. ராகு காலம்: காலை 7.30-9.00 எமகண்டம்: காலை 10.30-12.00 குளிகை: மதியம் 1.30-3.00 நாள்: வளர்பிறை அதிர்ஷ்ட எண்: 2, 7 பரிகாரம்: தயிர் (தகவல்கள் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையிலானவை)
மேஷம்: தள்ளிப்போன சுபகாரியங்கள் கைகூடி வரும். பழுதான வீடு, வாகனத்தை மாற்றுவீர்கள். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்கள் அனுசரணையாக நடந்து கொள்வார்கள். ஆன்மிகம், தியானம், யோகாவில் நாட்டம் ஏற்படும். நாடி வந்தவர்களுக்கு இயன்ற உதவியைச் செய்வீர்கள். ரிஷபம்: நேர்கொண்ட பார்வையுடன் சில முடிவுகளை எடுப்பீர்கள். பிரபலங்கள் தக்க சமயத்தில் உதவுவார்கள். வெளியூர் பயணங்கள் சிறப்பாக அமையும். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமை உணர்வுடன் செயல்படுவார்கள். யாரையும் எடுத்தெறிந்து பேசக் கூடாது. மிதுனம்: நீண்ட நாள் தேவைகள் பூர்த்தியாகும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். வியாபாரத்தில் வீண் அலைச்சல், டென்ஷன் விலகும். கேட்ட இடத்தில் கடன் உதவிகள் கிடைக்கும். நண்பர்களால் அனுகூலம் உண்டாகும். கடகம்: நினைத்த காரியங்கள் நிறைவேறும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். உங்களைச் சுற்றி இருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதைக் கண்டறிவீர்கள். புதிய நபர்களிடம் குடும்ப விஷயங்கள், தனிப்பட்ட தகவல்களைப் பேச வேண்டாம். சிம்மம்: புதிய வீடு, மனை, வாகனம் வாங்குவது குறித்து…
நல்லதே நடக்கும் 30.11.2025 விசுவாவசு 14 கார்த்திகை ஞாயிற்றுக்கிழமை திதி: தசமி இரவு 9.30 வரை. பிறகு ஏகாதசி. நட்சத்திரம்: உத்திரட்டாதி பின்னிரவு 1.09 வரை. பிறகு ரேவதி. நாமயோகம்: வஜ்ரம் காலை 7.08 வரை. பிறகு சித்தி. நாமகரணம்: தைதுலம் காலை 10.28 வரை. பிறகு கரசை. நல்ல நேரம்: காலை 7-9, பகல் 11-12, மதியம் 2-3, மாலை 6-7, இரவு 9-10. யோகம்: அமிர்தயோகம் நாள் முழுவதும். சூலம்: மேற்கு, வடமேற்கு காலை 10.48 வரை. சந்திராஷ்டமம்: பூரம். சூரிய உதயம்: சென்னையில் காலை 6.14. அஸ்தமனம்: மாலை 5.39. ராகு காலம்: மாலை 4.30-6.00 எமகண்டம்: மதியம் 12.00-1.30 குளிகை: பிற்பகல் 3.00-4.30 நாள்: வளர்பிறை அதிர்ஷ்ட எண்: 3, 5 பரிகாரம்: வெல்லம் (தகவல்கள் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையிலானவை)
நவம்பர் 30 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை முதல் டிசம்பர் 06 ஆம் தேதி சனிக்கிழமை வரையிலான 12 ராசிகளின் வார ராசிபலனை இங்கு காணலாம். மேஷம்: இந்த வாரம் உங்கள் உடல்நலத்தை கவனித்துக்கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும். வாகனம் ஓட்டும்போது கவனமாக இருங்கள். தொழில் மற்றும் வணிகத்தில் எதிர்பார்த்த திட்டம் உங்களுக்கு கிடைக்கும். அலுவலக அரசியல் அல்லது தேவையற்ற மோதல்களில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். காதல் உறவில் முன்னேற்றம் கிடைக்கும். திருமண வாழ்க்கையில் பொறுமையையும், புரிதலும் வேண்டும். செல்வாக்கு மிக்கவர்களிடம் கவனமாக இருங்கள். நிதி நிலைமை மிகவும் நிலையானதாக இருக்காது. எனவே, செலவு செய்வதற்கு அல்லது முதலீடு செய்வதற்கு முன் கவனமாக சிந்தியுங்கள். மாணவர்களுக்கு கவனச்சிதறல்கள் ஏற்படும். எனவே, ஆராய்ச்சி அல்லது கற்றல் நடவடிக்கைகளில் பங்கேற்பது நன்மை பயக்கும். ரிஷபம்: உடல்நலத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். உங்களுக்கு வயிறு தொடர்பான பிரச்சினைகள் ஏற்படலாம். எனவே, உணவு மற்றும் நல்வாழ்வில் கவனம் செலுத்துங்கள். தொழில் மற்றும்…
நவம்பர் 30 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையான இன்று மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான பலன்களை பார்க்கலாம். மேஷம்: நீங்கள் தனியாக இருக்க வேண்டிய சூழல் ஏற்படலாம். உங்கள் உள்மனதின் குரலைக்கேட்டு, அசல் தோற்றத்தை வெளிப்படுத்த வேண்டும். மாலை நேரத்தில் அன்பானவர்களுடன் அமர்ந்து நேரத்தை செலவிடுவீர்கள். ரிஷபம்: இன்று இன்பத்தையும், துன்பத்தையும் இணைந்தே அனுபவிப்பீர்கள். வீட்டு வேலைகள் அதிகம் இருக்கும். உங்களிடம் எஞ்சியிருக்கும் ஆற்றல், உறுதிப்பாடு மற்றும் மன வலிமை காரணமாக நீங்கள் விரும்புவதை சாதிக்க முடியும். அன்பானவர்களின் துணையால் மகிழ்ச்சியும், நிம்மதியும் ஏற்படும். மிதுனம்: வேலைக்கு,ம் குடும்பத்திற்கும் இடையில் உங்கள் நேரத்தை பிரித்து சரியாக கையாள்வீர்கள். குடும்பத்திற்காக நேரத்தை செலவிடுவீர்கள். குடும்பத்தினரை வெளியில் அழைத்துச் செல்ல திட்டமிட்டு அவர்களை ஆச்சரியப்படுத்துவீர்கள். உங்களது கனவுகள் நனவாகும் நாள் இது. கடகம்: நெருக்கமானவர்களுடன் உறவுகளை மேம்படுத்த முயற்சிப்பீர்கள். பொறுப்பும், கட்டுப்பாடும் பாராட்டப்படுவதுடன் உரிய சன்மானமும் கிடைக்கும். எதிர்காலத்தை மனதில் வைத்து சிந்திப்பீர்கள். சிம்மம்: அனைவருடனும் நட்பாக பழகுவீர்கள். எந்தவொரு…
நல்லதே நடக்கும் 29.11.2025 விசுவாவசு 13 கார்த்திகை சனிக்கிழமை திதி: நவமி இரவு 11.16 வரை. பிறகு தசமி. நட்சத்திரம்: பூரட்டாதி பின்னிரவு 2.20 வரை. பிறகு உத்திரட்டாதி. நாமயோகம்: ஹர்ஷணம் காலை 9.23 வரை. பிறகு வஜ்ரம். நாமகரணம்: பாலவம் காலை 11.51 வரை. பிறகு கௌலவம். நல்ல நேரம்: காலை 7-8, 10.30-12, மாலை 5-7, இரவு 9-10. யோகம்: மந்தயோகம் பின்னிரவு 2.20 வரை. பிறகு சித்தயோகம். சூலம்: கிழக்கு, தென்கிழக்கு காலை 9.12 வரை. சந்திராஷ்டமம்: மகம். சூரிய உதயம்: சென்னையில் காலை 6.14. அஸ்தமனம்: மாலை 5.39. ராகு காலம்: காலை 9.00-10.30 எமகண்டம்: மதியம் 1.30-3.00 குளிகை: காலை 6.00-7.30 நாள்: வளர்பிறை அதிர்ஷ்ட எண்: 5, 9 பரிகாரம்: தயிர் (தகவல்கள் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையிலானவை)
