Author: Editor TN Talks

மேஷம்: சந்தர்ப்பங்களையும் சரியாகப் பயன்படுத்தி, காரியம் சாதிப்பீர்கள். பெற்றோர் ஆதரவாக இருப்பார்கள். நீங்கள் எதிர்பார்த்திருக்கும் நல்ல செய்தி வெளியூரில் இருந்து வரும். வியாபாரத்தில் பழைய சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். ரிஷபம்: நம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். வியாபார ரீதியாக முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். வீண், ஆடம்பரச் செலவுகளைக் கட்டுப்படுத்துவீர்கள். பொருட்கள் சேரும். உங்கள் சேமிப்பு மேலும் அதிகரிக்கும். மிதுனம்: எதையும் தாங்கும் மனவலிமை கிடைக்கும். பண வரவு, பொருள் வரவு உண்டு. எதிர்ப்புகள், ஏமாற்றங்களை முறியடித்து வெற்றி பெறுவீர்கள். சகோதர உறவுகள் பக்கபலமாக இருப்பார்கள். தக்க சமயத்தில் உதவுவார்கள். பணம், நகை, முக்கிய ஆவணங்களை கவனமாக கையாளுங்கள். கடகம்: தைரியமாக செயல்பட்டு சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சகோதர உறவுகள் பக்கபலமாக இருப்பார்கள். நிலம், வீடு வாங்குவது, விற்பது சாதகமாக முடியும். நாடி வந்தவர்களுக்கு உங்களால் இயன்ற உதவிகளைச் செய்வீர்கள். சிம்மம்: பழைய சம்பவங்களை நினைத்துப்பார்த்து…

Read More

என் கேரக்டரயை புரிஞ்சிக்க மாட்றீங்களே என்று கூட்ட மேடையில் பஞ்ச் டயலாக்கை முதல்வர் ஸ்டாலின் பேசியது, திமுகவினரை ஆச்சரியமடைய செய்தது. திருவண்ணாமலை அருகே உள்ள மலப்பாம்பாடி கிராமத்தில் இன்று மாலை திமுக இளைஞரணி வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், திருவண்ணாமலை, வேலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களை உள்ளடக்கிய 91 சட்டமன்றத் தொகுதிகளை சேர்ந்த சுமார் ஒரு லட்சத்து 30 ஆயிரம் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். துணை முதலமைச்சர் உதயநிதி தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார். இதில் பங்கேற்பதற்காக, திருவண்ணாமலை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மாவட்ட எல்லையான மேல் செங்கத்தில் இருந்து வழிநெடுகிலும் கரகம், தப்பாட்டம், செண்டை மேளம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் மூலம் பொதுமக்கள் மற்றும் திமுக-வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதை தொடர்ந்து முதல்வர் ஸ்டாலிக்கு வெள்ளி சிம்மாசனம் பரிசாக வழங்கப்பட்டது. இதையடுத்து பேசிய முதலைமைச்சர் ஸ்டாலின்,…

Read More

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக- தவெக கூட்டணி அமையுமா என்ற கேள்விக்கு தவெக மூத்த தலைவர் செங்கோட்டையன் பதிலளித்துள்ளார். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கடந்த சில நாட்களுக்கு முன்பு தவெகவில் இணைந்தார். கட்சியில் அவருக்கு முக்கிய பொறுப்பான மாநில நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்பட்டது. அத்துடன் ஈரோடு, கோவை, திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களுக்கு அமைப்புச் செயலாளராகவும் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில், ஈரோட்டில் நடைபெறவுள்ள விஜயின் மக்கள் சந்திப்பு கூட்டத்திற்கான ஏற்பாடுகளை தற்போது செங்கோட்டையன் தீவிரமாக செய்து வருகிறார். இந்நிலையில், ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் அதிமுக, திமுக என பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் 300-க்கும் மேற்பட்டோர் அக்கட்சியின் நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தலைமையில் இன்று இணைந்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய செங்கோட்டையன், ”அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகளில் இருந்து 300-க்கும் மேற்பட்டோர் இன்று…

Read More

நல்லதே நடக்கும் | 14.12.2025 | விசுவாவசு 28 கார்த்திகை | ஞாயிற்றுக்கிழமை திதி: தசமி மாலை 6.50 வரை. பிறகு ஏகாதசி. நட்சத்திரம்: அஸ்தம் காலை 8.16 வரை. பிறகு சித்திரை. நாமயோகம்: சௌபாக்யம் காலை 11.40 வரை. பிறகு சோபனம். நாமகரணம்: விஷ்டி மாலை 6.50 வரை. பிறகு பவம். நல்ல நேரம்: காலை 7-9, பகல் 11-12, மதியம் 2-3, மாலை 6-7, இரவு 9-10. யோகம்: சித்தயோகம் நாள் முழுவதும். சூலம்: மேற்கு, வடமேற்கு காலை 10.48 வரை. சந்திராஷ்டமம்: பூரட்டாதி, உத்திரட்டாதி. சூரிய உதயம்: சென்னையில் காலை 6.22. அஸ்தமனம்: மாலை 5.44. ராகு காலம்: மாலை 4.30-6.00 எமகண்டம்: மதியம் 12.00-1.30 குளிகை: பிற்பகல் 3.00-4.30 நாள்: தேய்பிறை அதிர்ஷ்ட எண்: 1, 3 பரிகாரம்: வெல்லம்

Read More

மேஷம்: நண்பர்கள் ஆதரவாக இருப்பர். பூர்வீக சொத்து வழக்கில் இருந்த இழுபறி நிலை மாறும். சகோதரர்கள் உங்களை புரிந்து கொள்வர். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். வியாபாரத்தில் போட்டி குறையும். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்க்கவும். ரிஷபம்: பணவரவு திருப்திகரமாக இருக்கும். குடும்ப உறுப்பினர் களின் ஆதரவு கிட்டும். தம்பதிக்குள் இருந்த ஈகோ பிரச்சினை தீரும். பிள்ளைகளுடன் நேரத்தை செலவழிப்பீர். பயணங்கள் திருப்தி தரும். வியாபாரம் சிறக்கும். அலுவலகத்தில் தேடிய ஆவணம் தென்படும். மிதுனம்: பணவரவு உண்டு. சவாலான விஷயங்களை சாதாரணமாக முடித்து காட்டுவீர். வாகனம் செலவு வைக்கும். போட்டி, விவாதங்களில் வெற்றி கிடைக்கும். முக்கிய பிரமுகர்களால் பயடைவீர். வியாபாரரீதியாக பயணங்கள் மேற்கொள்வீர். உத்தியோகம் சிறக்கும். கடகம்: மன தைரியம் கூடும். கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும். சாதுர்யமாக பேசி முக்கிய காரியங்களை சாதித்துக் காட்டுவீர். எதிர்பாராத பணம் வரும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர். வியாபாரத்தை பெரிய அளவில் விரிவுபடுத்துவீர்.அலுவலகத்தில் மதிப்புயரும். சிம்மம்: பிள்ளைகளுக்காக சேமிக்கத் தொடங்குவீர்கள்.…

Read More

பிரபல யூடியுபர் சவுக்கு சங்கர் இன்று போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். அவர் கைது செய்யப்பட்டதன் பின்னணி குறித்து தெரிவிக்கிறது இந்த கட்டுரை. ஆளும் திமுக அரசின் முறைகேடுகள், ஊழல்களையும் மற்றும் பல அரசியல் நிலவரங்களையும் சவுக்கு மீடியா என்ற வளையொலி தலத்தில் பேசிவரும் சவுக்கு சங்கர் இன்று ஆதம்பாக்கம் காவல்துறையினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டிருக்கிறார். அவதூறாக பேசி தன்னிடம் ரூ. 2 லட்சம் பறித்துவிட்டதாக கடந்த மாதம் சென்னை ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் சினிமா தயாரிப்பாளர் ஆயிஷா சாதிக் என்பவர் அளித்த புகாரின் பேரில் அவர் கைது செய்யப்பட்டிருப்பதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக, இந்த வழக்கில் அவரைக் கைது செய்ய ஆதம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டுக்கு இன்று காலையில் காவல்துறையினர் சென்றிருக்கிறார்கள். வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்ததால் போலீஸாரால் அவரை உடனே கைது செய்ய முடியவில்லை. அதையடுத்து, தீயணைப்பு படையினர் உதவியுடன் அவரது வீட்டுக்கதவை உடைத்து உள்ளே சென்ற காவல்துறையினர்…

Read More

தனது அடுத்தகட்ட நடவடிக்கை குறித்த முடிவை அறிவிப்பதற்காக டிசம்பர் 15-ம் தேதி நடைபெறவிருந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆலோசனைக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட பின்னர் ஓ.பன்னீர்செல்வம் அதிமுக தொண்டர் உரிமை உரிமை மீட்புக் குழு என்ற பெயரில் செயல்பட்டு வருகிறார். இந்த அமைப்பின் சார்பில் பாஜக கூட்டணியில் இணைந்து 2024 மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்ட ஓபிஎஸ் தோல்வியை தழுவினார். 2024 மக்களவைத் தேர்தலில் அதிமுக தனி அணியாக போட்டியிட்ட நிலையில், சில மாதங்களுக்கு முன்பு பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக இணைந்தது. தமிழகத்தில் அந்த கூட்டணியின் தலைவராக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இருப்பார் என பாஜக அறிவித்தது. இதன் பின்னர் பாஜகவின் பார்வை ஓபிஎஸ் மீது படவில்லை. அதன்பின்னர் தமிழகம் வந்த பிரதமர் மோடி, அமித்ஷா போன்றோரை சந்திக்க ஓபிஎஸ்-க்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் விரக்தியடைந்த ஓபிஎஸ் பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறினார். அதன் பின்னரும்…

Read More

கிறிஸ்தவர்கள் வாக்கு வங்கி எந்த வகையிலும் விஜய் பக்கம் திரும்பிவிடக் கூடாது என்பதில் திமுக கண்ணும் கருத்துமாக இருக்கிறது. இதை உறுதிப்படுத்தும் விதமாக, திருநெல்வேலியில் டிசம்பர் 20-ம் தேதி நடைபெறவுள்ள கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார். டிசம்பர் 20-ம் தேதி காலையில் அரசு விழாவில் பங்கேற்கும் முதல்வர், மாலையில் கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் சார்பில் பாளைங்கோட்டையில் நடைபெறும் கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்கிறார். இதுபோல் கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் நடைபெறும் கிறிஸ்துமஸ் விழாவில் துணை முதல்வர் உதயநிதி பங்கேற்கிறார். தென்மாவட்டங்களில் சிறுபான்மையினரின் வாக்கு வங்கி பல தொகுதிகளில் கணிசமாக உள்ளது. இதை இழந்துவிட்டால் தென்மாவட்டங்கள் தங்களது கைவிட்டுப்போய்விடும் என்பதை திமுக-வும் காங்கிரஸும் உணர்ந்திருக்கின்றன. இதனால்தான் அந்த வாக்கு வங்கியை தக்கவைப்பதற்கான செயல்திட்டங்களை திமுக முன்கூட்டியே செயல்படுத்தத் தொடங்கியிருக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு, அரசு விழாவுக்காக நெல்லை வந்திருந்த முதல்வர், சிஎஸ்ஐ கிறிஸ்தவ பேராயர், குருமார்களை சந்தித்துப் பேசிவிட்டுச் சென்றார். இதுபோல், தூத்துக்குடி…

Read More

நல்லதே நடக்கும் | 13.12.2025 | விசுவாவசு 27 கார்த்திகை | சனிக்கிழமை திதி: நவமி மாலை 4.39 வரை. பிறகு தசமி. நட்சத்திரம்: அஸ்தம் நாள் முழுவதும். நாமயோகம்: ஆயுஷ்மான் காலை 11.12 வரை. பிறகு சௌபாக்யம். நாமகரணம்: கரசை மாலை 4.39 வரை. பிறகு வணிசை. நல்ல நேரம்: காலை 7-8, 10.30-12, மாலை 5-7, இரவு 9-10. யோகம்: மந்தயோகம் நாள் முழுவதும். சூலம்: கிழக்கு, தென்கிழக்கு காலை 9.12 வரை. சந்திராஷ்டமம்: பூரட்டாதி சூரிய உதயம்: சென்னையில் காலை 6.22. அஸ்தமனம்: மாலை 5.44. ராகு காலம்: காலை 9.00-10.30 எமகண்டம்: மதியம் 1.30-3.00 குளிகை: காலை 6.00-7.30 நாள்: தேய்பிறை அதிர்ஷ்ட எண்: 1, 3 பரிகாரம்: தயிர்

Read More

12 ராசிகளுக்கும் இன்றைய ராசி பலன்களை தெரிந்து கொள்வோம். மேஷம்: எதிர்பாராத இடத்திலிருந்து உதவி கிடைக்கும். புது நண்பர்கள் அறிமுகமாவர். வியாபாரத்தில் லாபம் இருக்கும். வாடிக்கையாளர்களின் ரசனையை புரிந்து கொள்வீர். பங்குதாரர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். அலுவலகத்தில் சக ஊழியர் மத்தியில் மதிப்பு உயரும். ரிஷபம்: பணவரவு உண்டு. மனவலிமையுடன் எதையும் முடித்துக் காட்டுவீர்கள். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். அலுவலகத்தில் உங்கள் கை ஓங்கும். வியாபாரரீதியாக பயணங்கள் மேற்கொள்வீர். பொறுப்புகள் அதிகரிக்கும். மிதுனம்: கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவர். தெய்வீக ஈடுபாடு கூடும். வியாபாரத்தில் ஓரளவு லாபம் உண்டு. புதிய யுக்திகளைக் கையாண்டு வாடிக்கையாளர்களை கவருவீர். உத்தியோகம் சிறக்கும். கடகம்: கையில் பணம் புரளும். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில்அக்கறை காட்டுவர். நீண்டநாட்களாக பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். வியாபாரம் சிறக்கும். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலையுண்டு என்று இருக்க பழகிக் கொள்வது நல்லது.…

Read More