Author: Editor TN Talks
12 ராசிகளுக்குமான இன்றைய (டிச.24) பலன்களை பார்க்கலாம். மேஷம்: தைரியமான முடிவுகளை எடுத்து வெற்றி காண்பீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கும் எண்ணம் வரும். சகோதரர் வகையில் அனுகூலம் உண்டு. வீடு, வாகன பராமரிப்பை மேற்கொள்வீர்கள். ரிஷபம்: புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். இழுபறியாக இருந்துவந்த பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கும். தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும். நீண்டநாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். மனக்குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். மிதுனம்: உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை உணர்வீர்கள். சொந்தபந்தங்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி கிட்டும். வியாபாரத்தில் நல்ல லாபம் உண்டு. பழைய மின்சாதனங்களை மாற்றி புதியது வாங்குவீர்கள். கடகம்: எந்த காரியத்தைத் தொட்டாலும் பலமுறை முயன்று முடிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். நண்பர்கள், உறவினர்கள் உங்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்வார்கள். யாருக்கும் எந்த உத்தரவாதமோ உறுதிமொழியோ தர வேண்டாம். சிம்மம்: எதிரிகளை சாமர்த்தியமாகக் கையாள்வீர்கள். கணவன் – மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். விருந்தினர்கள்,…
சபரிமலையில் ஐயப்ப பக்தர்களுக்கான அன்னதான உணவு, விருந்து போன்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி சாம்பார், ரசம், பாயாசம், அப்பளம், கூட்டு உள்ளிட்ட பல பதார்த்தங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. சபரிமலை சந்நிதானத்தின் மாளிகாபுரம் கோயிலுக்குப் பின்னால் அன்னதான மண்டபம் உள்ளது. மண்டல கால வழிபாடு தொடங்கியதில் இருந்து இங்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. காலை 6 மணி முதல் காலை 11 மணி வரை உப்புமா, கொண்டைக் கடலை குழம்பு, சட்னி, சுடு தண்ணீர் வழங்கப்படுகிறது. மதியம் 12 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை மசாலா கலவை சாதம், பருப்பு குழம்பு, ஊறுகாயும், இரவு உணவாக மாலை 6.45 மணி முதல் கோயில் மூடப்படும் வரை கஞ்சி மற்றும் வாழைக்காய், தட்டாம்பயறு கூட்டும் வழங்கப்படுகிறது. தினமும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இங்கு உணவருந்தி வருகின்றனர். இந்த உணவு வெளிமாநில பக்தர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தவில்லை. எனவே ‘விருந்து பாணியில்’ அன்னதானம் வழங்கப்படும் என்று…
23.12.2025 | விசுவாவசு 08 மார்கழி | செவ்வாய்க்கிழமை திதி: திருதியை நண்பகல் 12.13 வரை, பிறகு சதுர்த்தி. நட்சத்திரம்: திருவோணம் இன்று நாள் முழுவதும். நாமயோகம்: வியாகாதம் மாலை 4.26 வரை, பிறகு ஹர்ஷணம். நாமகரணம்: கரசை நண்பகல் 12.13 வரை, பிறகு வணிசை. நல்ல நேரம்: காலை 8-9, நண்பகல் 12-1, இரவு 7-8. யோகம்: சித்தயோகம் இன்று நாள் முழுவதும். சூலம்: வடக்கு, வடமேற்கு காலை 10.48 வரை. சந்திராஷ்டமம்: பால் சூரிய உதயம்: சென்னையில் காலை 6.27 மணி. அஸ்தமனம்: மாலை 5.48 மணி. ராகு காலம்: பிற்பகல் 3.00-4.30 எமகண்டம்: காலை 9.00-10.30 குளிகை: மதியம் 12.00.1.30 ராகு காலம்: பிற்பகல் 3.00-4.30 எமகண்டம்: காலை 9.00-10.30 குளிகை: மதியம் 12.00.1.30
12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பை தற்போது பார்க்கலாம். மேஷம்: நினைத்த காரியம் அடுத்தடுத்து நிறைவேறும். மனதில் நிலவிய குழப்பங்கள் நீங்கி தெளிவாக முடிவெடுப்பீர்கள். கல்வியாளர், அறிஞர்களின் அறிமுகம் கிடைக்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடாகும். வெளியூர் பயணம் திருப்தி தரும். ரிஷபம்: நீண்டநாட்களாக எதிர்பார்த்த இடத்திலிருந்து பணம் வரும். புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். உடன்பிறந்தவர்களால் சில காரியங்கள் நிறைவேறும். வாகனத்தை சீர் செய்வீர்கள். மனைவிவழி உறவினர் உங்கள் உதவியை நாடுவார். மிதுனம்: எதிர்பாராத செலவுகளால் சேமிப்புகள் கரையக்கூடும். கணவன் – மனைவி இடையேயான பிரச்சினைக்குள் மற்றவர்களை நுழைய விடாதீர்கள். ஆன்மிகம், யோகாவில் மனதை செலுத்துங்கள். சகோதரரால் வீண் செலவுகள் ஏற்படக் கூடும். கடகம்: குடும்பத்தில் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. பழைய கடனையை பைசல் செய்யும் அளவுக்கு பணவரவு உண்டு. பிள்ளைகளால் அலைச்சல் இருக்கும். வியாபாரத்தில் குறிப்பிடத்தக்க அளவில் லாபம் கிடைக்கும். சிம்மம்: உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். சகோதரரால் நன்மை உண்டு. உற்சாகமான பேச்சால் அனைவரையும் கவருவீர்கள்.…
கேரளாவில், 102 வயது மூதாட்டி ஒருவர், மூன்றாவது முறையாக சபரிமலை 18 படிகளில் ஏறிச்சென்று அய்யப்ப சுவாமியை தரிசித்தார். கேரள மாநிலம், வயநாடு, மீனங்காடி பகுதியைச் சேர்ந்த பாருக்குட்டி, 2023-ல் நுாறாவது வயதை கொண்டாடினார். அப்போது அவருடைய பேரன்களில் ஒருவர் சபரிமலைக்கு அழைத்துள்ளார். வாழ்வில் ஒருமுறை கூட சபரிமலை போகாத இவர், பேரனின் அழைப்பை ஏற்றுக்கொண்டு மாலையிட்டு விரதமிருந்து முதல் முறையாக சபரிமலை சென்றார். கடந்த ஆண்டு இரண்டாவது முறையாக வந்த பாருக்குட்டி, இந்தாண்டு மூன்றாவது முறையாக அய்யப்பனை தரிசிக்க நேற்று சபரிமலை வந்தார். பேரன்கள் மற்றும் உறவினர்கள் உட்பட 12 பேர் அவர் வந்த குழுவில் இடம் பெற்றிருந்தனர். 102 வயதில் ஏற்பட்டுள்ள உடல் தளர்ச்சியால் இவர், பம்பையில் இருந்து டோலியில் வந்தார். பின், அங்கு பணியில் உள்ள போலீசாரின் உதவியுடன் 18 படிகள் ஏறி, அய்யப்பனை தரிசனம் செய்தார். இது ஒரு மகா பாக்கியம் என்று அவர் கூறினார்.…
22.12.2025 | விசுவாவசு 07 மார்கழி | திங்கள்கிழமை திதி: துவிதியை காலை 10.55 மணி வரை, பிறகு திருதியை. நட்சத்திரம்: உத்திராடம் நாளை அதிகாலை 5.30 வரை, பிறகு திருவோணம். நாமயோகம்: துருவம் மாலை 4.36 வரை, பிறகு வியாகாதம். நாமகரணம்: கெளலவம் காலை 10.52 வரை, பிறகு தைதுலம். நல்ல நேரம்: காலை 6.00-7.00, 9.00-10.30, மதியம் 1.00-2.00, மாலை 3.00-4.00, 6.00-7.00. யோகம்: மந்தயோகம் நாளை அதிகாலை 5.30 வரை, பிறகு அமிர்தயோகம். சூலம்: கிழக்கு, தென்மேற்கு காலை 9.12 வரை. சந்திராஷ்டமம்: திருவாதிரை சூரிய உதயம்: சென்னையில் காலை 6.26. அஸ்தமனம்: மாலை 5.48. ராகு காலம்: காலை 7.30-9.00 எமகண்டம்: காலை 10.30-12.00 குளிகை: மதியம் 1.30-3.00 நாள்: வளர்பிறை அதிர்ஷ்ட எண்: 6, 9 பரிகாரம்: தயிர்
மேஷம்: பழைய நண்பர்களால் ஆதாயம், அனுகூலம் உண்டு. குடும்பத்தினரின் விருப்பத்தை அறிந்து நிறைவேற்றுவீர்கள். பிள்ளைகளால் மரியாதை, அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் வராது என்று நினைத்த பழைய கடன் வசூலாகும். அனைவரையும் அரவணைத்துச் செல்வீர்கள். ரிஷபம்: தொழில் வளர்ச்சிக்காக முக்கியப் பிரமுகர்களின் உதவியை நாடுவீர்கள். குடும்பத்தினரின் உணர்வைப் புரிந்துகொள்வீர்கள். வீடு, வாகன வகையில் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். அலுவலகப் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். பெரிய பதவி, பொறுப்புகள் தேடி வரும். மிதுனம்: சின்னச் சின்ன கவலைகள் வந்துபோகும். நீங்கள் ஒன்று பேச, மற்றவர்கள் வேறுவிதமாகப் புரிந்துகொள்வார்கள். எக்காரியத்திலும் நிதானம் அவசியம். நாடி வந்தவர்களுக்கு இயன்ற உதவிகளைச் செய்வீர்கள். பூர்வீக சொத்து விஷயத்தில் இருந்த சிக்கல்கள் தீரும். கடகம்: பணப் பற்றாக்குறை விலகும். மனதுக்குப் பிடித்தவர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். பிள்ளைகளை நல்வழிப்படுத்துவீர்கள். மனநிறைவுடன் சில வேலைகளை செய்து முடிப்பீர்கள். யாரையும் எடுத்தெறிந்து பேசக் கூடாது. கேட்ட இடத்தில் பண உதவிகள் கிடைக்கும். சிம்மம்: எதிர்பார்த்த வகையில் பணம் வரும். பழைய பிரச்சினைக்கு…
21.12.2025 | விசுவாவசு 05 மார்கழி | ஞாயிற்றுக்கிழமை திதி: பிரதமை காலை 9.12 வரை, பிறகு துவிதியை. நட்சத்திரம்: பூராடம் நாளை அதிகாலை 3.34 வரை. நாமயோகம்: விருத்தி மாலை 4.31 வரை, பிறகு துருவம். நாமகரணம்: பவம் காலை 9.12 வரை, பிறகு பாலவம். நல்ல நேரம்: காலை 7-9, பகல் 11-12, மதியம் 2-3, மாலை 6-7, இரவு 9-10. யோகம்: சித்தயோகம் நாளை அதிகாலை 3.34 வரை. சூலம்: மேற்கு, வடமேற்கு காலை 10.48 வரை. சந்திராஷ்டமம்: மிருகசீரிடம். சூரிய உதயம்: சென்னையில் காலை 6.26 மணி. அஸ்தமனம்: மாலை 5.47 மணி. ராகு காலம்: மாலை 4.30-6.00. எமகண்டம்: மதியம் 12.00-1.30 குளிகை: பிற்பகல் 3.00-4.30 நாள்: வளர்பிறை அதிர்ஷ்ட எண்: 2,7 பரிகாரம்: வெல்லம்
மேஷம்: நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த பணம் கைக்கு வரும். சொன்ன சொல்லைக் காப்பாற்ற துடிப்புடன் செயல்படுவீர்கள். பொறுப்புகள், பதவிகள் தேடி வரும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வெளிவட்டாரத்தில் உங்கள் வார்த்தைக்கு மரியாதை கூடும். ரிஷபம்: எதிர்ப்புகள், சவால்களைத் தாண்டி முன்னேறுவீர்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் திட்டமிட்டதை விட அதிகரிக்கும். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். நவீன மின்சாதனங்கள் வாங்குவீர்கள். வெளியூர் பயணத்தால் அனுகூலம் உண்டு. மிதுனம்: எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு கரையும். குடும்பத்தாருடன் விட்டுக்கொடுத்து செல்லுங்கள். வீண் அலைச்சலும் டென்ஷனும் ஏற்படக் கூடும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவுடன் நடந்து கொள்ளுங்கள். பால்ய நண்பரை சந்திப்பீர்கள். கடகம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். உறவினர்களின் வருகையால் வீடு களைகட்டும். வாகனப் பராமரிப்பை மேற்கொள்வீர்கள். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்ல திட்டமிடுவீர்கள். சிம்மம்: கணவன் – மனைவிக்குள் இருந்த ஈகோ பிரச்சினை, வீண் சந்தேகம் விலகும். புது பொறுப்புகளும், பதவிகளும் தேடி வரும். உங்களின் இலக்கை நோக்கி…
தேர்தல் நெருங்குவதால் புது புது அடிமைகளை பாஜகவினர் தேடிக்கொண்டிருக்கிறார்கள் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார். திமுக பகுத்தறிவு பாசறை அணி மாநில செயலாளர் திருவிடம் என்பவரது படத்திறப்பு நிகழ்ச்சி, திருவாரூர் அருகே உள்ள கலைஞர் கோட்டத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு துணை முதல்வரும், இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு, திருவிடம் உருவப்படத்தை திறந்து வைத்து பேசியதாவது: மறைந்த திருவிடம் மிகச் சிறந்த கொள்கை பற்றாளராக திகழ்ந்தவர். தனிமனித இயக்கமாக விளங்கியவர். அவரைப் போல லட்சக்கணக்கான தொண்டர்களை பெற்றது திமுக. இளைஞர் அணியினரும், கட்சியினரும் ஒவ்வொருவருமே தனி இயக்கமாக செயல்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக பீகார் தேர்தல் வெற்றிக்கு பின்னர் அடுத்தது தமிழ்நாடு என அமித்ஷா தெரிவித்த கருத்துக்கு திருவண்ணாமலையில் நான் பதில் அளித்தபோது ‘வி ஆர் ரெடி டு ஃபைட்’ என தெரிவித்தேன். தேர்தலுக்கு இன்னும் 100 நாட்கள் உள்ளன. ஒவ்வொரு தொண்டர்களும்…
