Author: Editor TN Talks

‘திமுக கூட்டணியில் சலசலப்புகள் நிலவுகிறது’ என்ற செய்திகளுக்கு அடிப்படை காரணமாக இருப்பது தொகுதி பங்கீட்டில் நிலவும் வாய்க்கால் பிரச்சனைகள் தான். அப்படிப்பட்ட தொகுதி பங்கீடு விவகாரத்தில் தற்போது திமுக ஒரு முடிவு செய்திருப்பதாகவும், விசிகவை தர்ம சங்கடத்திற்கு உள்ளாக்கும் ஒரு முக்கிய நகர்வை திமுக மேற்கொள்ள உள்ளதாகவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. திமுகவின் தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவின் சார்பில் மாநில மற்றும் மாவட்ட அளவிலான நிர்வாகிகள் கூட்டம் நடத்தப்பட்டது. அதில் திமுகவின் தேர்தல் பணிகளோடு சேர்த்து கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீடுகள், அவர்களுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளில் உள்ள வெற்றி வாய்ப்புகள் உள்ளிட்டவை குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து கசிந்த தகவலின் படி, “கூட்டணி கட்சிகள் கடந்த முறை எத்தனை தொகுதிகளில் வெற்றி பெற்றனரோ, அந்த எண்ணிக்கையின் அடிப்படையில் இம்முறை சீட் ஒதுக்குவோம்” என சில முக்கிய நிர்வாகிகள் கறாராக சொல்லியிருக்கிறார்கள். இந்த கூட்டத்தின் முடிவில், “திமுகவுக்கு 170 சீட்டுகள்; தோழமைகளுக்கு 64” என…

Read More

அஸ்வினி: வேலையிடத்து பிரச்சனையை வீட்டிற்குக் கொண்டுவர வேண்டாம் . பரணி: பழைய வீட்டில் மராமத்துப் பணிகளை மேற்கொள்வீர்கள். கார்த்திகை: உங்களின் வார்த்தையில் மயங்கி உதவிகள் தேடி வரும். ரோகிணி: மனைவியின் பேச்சில் கிறங்கிக் கிடப்பீர்கள். மிருகசீரிடம்: சலிப்பில்லாத உழைப்பால் புதிய ஆர்டர்களைப் பெறுவீர்கள். திருவாதிரை: எந்தக் காரியத்திலும் நிதானம் தவறி நடக்காதீர்கள். புனர்பூசம்: சிக்கலாக இருந்த வியாபாரம் சீராக நடக்கத் தொடங்கும் . பூசம்: தவறாக நினைத்தவர்கள் உங்கள் மேன்மையை அறிந்து தேடி வருவார்கள். ஆயில்யம்: பிள்ளைகளின் கடமையை நிறைவேற்றி மகிழ்ச்சி அடைவீர்கள். மகம்: புதிய சொத்து வாங்குவதற்காக அட்வான்ஸ் கொடுப்பீர்கள். பூரம்: குடும்பத்தின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். உத்திரம்: குடும்பத்தில் இருந்த குழப்பம் நீங்கி தெளிவான நிலை ஏற்படும். அஸ்தம்: வெளிநாடு செல்வதற்காக விசா அப்ளை பண்ணுவீர்கள். சித்திரை: வாக்குத் திறமையால் எதிரிகளையும் நண்பர்கள் ஆக்குவீர்கள். சுவாதி: முடியாத காரியத்தை முடித்து முதலாளியின் அன்பைப் பெறுவீர்கள் விசாகம்: ஆன்லைன்…

Read More

31.12.2025 | விசுவாவசு – மார்கழி 16 | புதன்கிழமை திதி: துவாதசி பின்னிரவு 1.48 வரை, பிறகு திரயோதசி. நட்சத்திரம்: கிருத்திகை பின்னிரவு 1.28 வரை, பிறகு ரோகிணி. நாமயோகம்: சாத்தியம் இரவு 9.10 வரை, அதன் பிறகு சுபம். நாமகரணம்: பவம் பிற்பகல் 3.27 வரை, அதன் பிறகு பாலவம். நல்ல நேரம்: காலை 6-7.30, 9-10, மதியம் 1.30-3, மாலை 4-5, இரவு 7-8. யோகம்: அமிர்தயோகம் பின்னிரவு 1.28 வரை, பிறகு சித்தயோகம். சூலம்: வடக்கு, வடகிழக்கு மதியம் 12.24 மணி வரை. சந்திராஷ்டமம்: சுவாதி சூரிய உதயம்: சென்னையில் காலை 6.30 மணி. அஸ்தமனம்: மாலை 5.53 மணி. ராகு காலம்: மதியம் 12.00-1.30 எமகண்டம்: காலை 7.30-9.00 குளிகை: காலை 10.30-12.00 நாள்: வளர்பிறை. அதிர்ஷ்ட எண்: 2, 7. பரிகாரம்: பால்

Read More

மேஷ ராசி அன்பர்களே! இன்று எதிர்பார்த்த காரியம் நிறைவேறும். உங்களுக்கு அரசாங்க சன்மானங்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் நல்ல வருமானம் உண்டாகும். பதவி உயர்வு சம்பள உயர்வு ஏற்படும். வியாபாரத்தில் மள மளவென்று லாபம் அதிகரிக்கும். குலதெய்வத்தினுடைய அனுக்கிரகம் உங்களுக்கு உண்டு. மேற்கு திசையில் இருந்து எதிர்பார்த்த செய்தி வந்து மகிழ்வை கொடுக்கும். எதையும் நேர்மையாக செய்ய வேண்டும் என்று மனம் உறுதிப்படும். ரிஷப ராசி அன்பர்களே! ஆசைகள் எல்லாம் நிறைவேறும் நாள். வியாபாரத்தில் மிகப்பெரிய லாபம் கிடைக்கும். பற்பல வகையில் நன்மைகள் சேரும். தனதானிய சேர்க்கை ஏற்படும். தொழிலில் மேன்மை உண்டாகும். மற்றவர்கள் பொறாமைப்படும் நிலை ஏற்படும். கையிருப்பு அதிகரிக்கும். பிள்ளைகளால் பெரிய சிறப்பு ஏற்படும். மன அமைதி உண்டாகும். தெற்கு திசையில் இருந்து நல்ல செய்தி வந்து கிடைக்கும். மிதுன ராசி அன்பர்களே! தாமதமானாலும் காரிய வெற்றி பெருகின்ற நாள். பற்பல வகையிலும் நன்மைகள் உண்டாகும். நீங்கள் விருப்பப்பட்ட காரியம் தடையில்லாமல் நிறைவேறும்.…

Read More

மேஷம்: குடும்பத்துடன் குலதெய்வக் கோயிலுக்குச் சென்று வருவீர்கள். பிள்ளைகளின் உடல்நலத்தில் முன்னேற்றம் காணப்படும். அடிக்கடி செலவு வைத்த வாகனத்தை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களின் ஆதரவு கிட்டும். வியாபாரத்தை விரிவுபடுத்த திட்டமிடுவீர்கள். ரிஷபம்: முன்கோபம், டென்ஷன் இருக்கும். குடும்பத்தினரிடம் கோபத்தைக் காட்ட வேண்டாம். அலுவலகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். எதிர்பாராத செலவுகளால் கடன் வாங்கும் சூழல் ஏற்படும். அடுத்தவர் விவகாரங்களில் அநாவசியமாகத் தலையிட வேண்டாம். மிதுனம்: நம்பிக்கைக்குரியவர்களை ஆலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். கணவன் – மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். விலகியிருந்த பழைய சொந்தங்கள் வீடு தேடி வருவார்கள். வீடு, வாகனப் பராமரிப்பை மேற்கொள்வீர்கள். திடீர் பயணம் ஏற்படும். கடகம்: மறைமுக எதிர்ப்புகள் விலகும். உங்களின் சுறுசுறுப்பைப் பார்த்து மற்றவர்கள் வியப்பார்கள். குடும்பத்தில் குழப்பம் நீங்கி நிம்மதி ஏற்படும். புது இடத்துக்கு கடையை மாற்றுவதற்கான ஏற்பாடுகள் தீவிரமடையும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் அரவணைப்பு உண்டு. சிம்மம்: நீண்டநாள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள். விருந்தினர் வருகையால் குடும்பத்தில் கலகலப்பான சூழல் காணப்படும்.…

Read More

உள்நோக்கத்துடன் குண்டர் தடுப்பு சட்டத்தை பிரயோகிக்கும் காவல்துறை அதிகாரிகள் மீது, துறை ரீதியான நடவடிக்கை எடுக்கும்படி, தமிழக அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வாடகை வீட்டை காலி செய்ய மறுத்ததுடன், ஆபாசமாக திட்டியதாக அமீனால் பீவி என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில், யு டியூபர் வாராகிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட வாராகியை, குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கும்படி, சென்னை மாநகர காவல் ஆணையர், டிசம்பர் 3ம் தேதி உத்தரவு பிறப்பித்திதுந்தார். இந்த உத்தரவை எதிர்த்து, வாராகியின் மனைவி நீலிமா, தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், பி.தனபால் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், காவல் துறைக்கு எதிராக கருத்து தெரிவித்ததால் தனது கணவருக்கு எதிராக குண்டர் தடுப்பு சட்டம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அரசு தரப்பில், மனுவுக்கு விரிவாக பதிலளிக்க அவகாசம் வழங்க வேண்டும் என…

Read More

வைகுண்ட ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு, பெருமாள் கோயில்களில் கோலாகலமாக இன்று நடந்தது. பூலோக வைகுண்டம் என்றழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் கடந்த டிசம்பர் 19ம் தேதி துவங்கியது. தொடர்ந்து நடந்த பகல் பத்து நிகழ்ச்சியில் ஒவ்வொரு நாளும் எம்பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்து வந்தார். சிகர நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு இன்று நடந்தது. விரஜாநதி மண்டபத்தில் பெருமாள் வேத விண்ணப்பம் கேட்டருளினார். தொடர்ந்து காலை 5.45 மணிக்கு பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. பரமபத வாசலை கடந்த நம்பெருமாளை லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பக்தர்களின் ரங்கா, ரங்கா கோஷத்தால் விண்ணதிர்ந்தது. ராப்பத்து எனப்படும் திருவாய்மொழி திருநாள் இன்று துவங்குகிறது. இதேபோல் சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில், மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி கோயில், திருப்பதி வெங்கடாசலபதி கோயில் உள்பட பல்வேறு பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல்…

Read More

மகர விளக்கு கால பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று(டிச., 30) மாலை திறக்கப்படுகிறது. நாளை (டிச., 31) அதிகாலை முதல் நெய்யபிஷேகம் துவங்கும். மண்டல கால பூஜை முடிந்து டிச., 27- இரவு 10:00 மணி-க்கு நடை அடைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து சபரிமலையில் மகர விளக்கு காலத்துக்கான ஏற்பாடுகள் துவங்கின. ஆழிகுண்டத்தில் சாம்பல் அப்புறப்படுத்தப்பட்டது. சபரிமலை சன்னிதான சுற்றுப்புறங்கள் சுத்தம் செய்யப்பட்டன. மகரவிளக்கு காலத்துக்கு தேவையான பொருட்கள் டிராக்டர் மூலம் சன்னிதானம் கொண்டு வரப்பட்டது. மகர விளக்கு காலத்தில் கூடுதல் பக்தர்கள் வருவார்கள் என்பதை கருத்தில் கொண்டு கூடுதல் அரவணை தயாரித்து ஸ்டாக் செய்யப்பட்டுள்ளது. இன்று மாலை 5:00 மணிக்கு மேல் சாந்தி பிரசாத் நம்பூதிரி நடையை திறந்து தீபம் ஏற்றுவார். அதைத்தொடர்ந்து பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். வேறு பூஜைகள் எதுவும் இன்று இல்லை. இரவு 11:00 மணிக்கு நடை அடைக்கப்படும். நாளை அதிகாலை 3:00 மணிக்கு நடை திறந்ததும் தந்திரி மகேஷ்…

Read More

மேஷம்: யாரையும் குறை சொல்ல வேண்டாம். பிள்ளைகளின் பிடிவாதப் போக்கு அதிகரிக்கும். வியாபாரத்தில் போட்டிகள், சவால்களை எதிர்கொள்ள வேண்டியது வரும். வாகனம் அடிக்கடி செலவு வைக்கும். அடுத்தவர் விவகாரங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. ரிஷபம்: எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். தெளிவான முடிவுகளால் தொல்லைகள் நீங்கும். உத்தியோகத்தில் இழுபறியாக இருந்த வேலைகளையெல்லாம் முடிப்பீர்கள். ஆன்மிகத்தில் நாட்டம் ஏற்படும். வெளியூர் பயணத்தால் லாபம் உண்டாகும். மிதுனம்: குடும்பத்தார் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். எதிர்காலத்துக்கான திட்டங்கள் தீட்டுவீர்கள். பிள்ளைகளால் வெளி வட்டாரத்தில் பெருமை ஏற்படும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். கடகம்: அரசு காரியங்களில் இருந்துவந்த தடைகள் விலகும். வெளிவட்டாரத்தொடர்பு அதிகரிக்கும். பயணங்கள் மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் சரக்குகள் விற்றுதீரும். அலுவலகத்தில் இருந்துவந்த கெடுபிடிகள் நீங்கும். பங்கு வர்த்தகத்தில் குறிப்பிடத்தக்க லாபம் ஏற்படும். சிம்மம்: நீண்டநாட்களாக விலகியிருந்த உறவினர்கள், நண்பர்களெல்லாம் தேடிவந்து பேசுவார்கள். கணவன் – மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்த திட்டமிடுவீர்கள்.…

Read More

மகரவிளக்கு வழிபாட்டுக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலில் நாளை (டிச.30) மாலை நடை திறக்கப்பட உள்ளது. இதற்காக கோயில், சந்நிதானம், நீலிமலை உள்ளிட்ட பல பகுதிகளிலும் தூய்மைப்பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த 27-ம் தேதி மண்டல பூஜை நிறைவடைந்ததைத் தொடர்ந்து அன்று இரவு நடை சாத்தப்பட்டது. ஐயப்பனுக்கு அணிவித்த தங்க அங்கி மீண்டும் ஆரன்முலா பார்த்தசாரதி கோயில் வைப்பறைக்கு கொண்டு செல்லப்பட்டன. தொடர்ந்து கற்பூர ஆழி அணைக்கப்பட்டு மண்டல கால சம்பிரதாயங்கள் அனைத்தும் முடிந்தன. இதனைத் தொடர்ந்து மகர விளக்கு வழிபாட்டுக்காக நாளை (டிச.30) மாலை 5 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட உள்ளது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையில் மேல்சாந்தி பிரசாத் நம்பூதிரி நடை திறந்து வைக்க உள்ளார். பின்பு வழிபாடுகள் இன்றி இரவு 11 மணிக்கு நடைசாத்தப்படும். தொடர்ந்து நாளை மறுநாள் அதிகாலை 3 மணி முதல் மகரகால வழிபாட்டுக்கான பூஜைகள் தொடங்கும்.…

Read More