Author: Editor web1
மனச்சோர்வு ஏற்படலாம். யோகா, தியானம் செய்வது நல்லது. வேலையில் இருந்த அழுத்தம் சற்று குறைந்து, மன அமைதி நிலவும். தொழில் செய்பவர்கள் புதிய கிளைகளைத் தொடங்கலாம். புதிய முயற்சிகள் கைகூடும். அரசியல்வாதிகள் தலைமையின் நம்பிக்கையைப் பெறுவர். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவர். அதிர்ஷ்ட எண்: 7 அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
நவகிரகங்களில் சுப கிரகங்களில் ஒருவராகவும், களத்திர காரகன், போக காரகன் மற்றும் சுக போகங்களின் அதிபதியாகவும் விளங்குபவர் சுக்கிர பகவான். மனித வாழ்க்கைக்குத் தேவையான அத்தனை லௌகீக சுகங்களையும் (பணம், புகழ், வாகனம், ஆடை, ஆபரணங்கள், கலைகளில் தேர்ச்சி, மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை) வாரி வழங்குவதில் சுக்கிர பகவானுக்கு நிகர் எவருமில்லை. ஒருவருக்கு தனது வாழ்நாளில் வரும் தசைகளிலேயே மிக நீண்ட காலம், அதாவது 20 ஆண்டுகள் நடக்கக்கூடிய ஒரே தசை சுக்கிர தசை தான். இந்த 20 ஆண்டுகளில் ஒருவர் குபேரனாக மாறுவதும் அல்லது அத்தனை சுகங்களையும் இழந்து வீதிக்கு வருவதும் ஜாதக அமைப்பைப் பொறுத்தே உள்ளது. சுக்கிர தசை ஒருவருக்கு அசுர வளர்ச்சியை, எதிர்பாராத பண வரவை, சமூகத்தில் உச்சகட்ட புகழைத் தர வேண்டும் என்றால், அவரின் ஜனன கால ஜாதகத்தில் சுக்கிரன் சில அமைப்புகளில் இருப்பது அவசியம். லக்ன அடிப்படையில் சாதக அமைப்புகள் (லக்ன சுபர்கள்): சுக்கிரன் இயற்கையிலேயே…
ஜோதிடத்தில் “குரு பார்க்கின் கோடி நன்மை” என்ற பழமொழி உண்டு. நவகிரகங்களில் முதன்மையான சுப கிரகமாக கருதப்படுபவர் குரு பகவான் (வியாழன்). குரு பகவானின் பார்வைக்கு மிக உன்னதமான ஆற்றல் உண்டு. இருப்பினும், எல்லா நேரங்களிலும் குருவின் பார்வை முழுமையான நன்மைகளை மட்டுமே தருவதில்லை. ஒருவருடைய ஜாதக அமைப்பு, லக்னம் மற்றும் தசா புத்திகளைப் பொறுத்து அது சாதகமாகவோ அல்லது பாதகமாகவோ மாறக்கூடும். குரு பகவான் பார்வையின் அடிப்படைத் தத்துவம்: ஜோதிட சாஸ்திரப்படி, ஒருவரின் ஜாதகத்தில் குரு பகவான் தான் இருக்கும் இடத்தை விட, பார்க்கும் இடங்களை புனிதப்படுத்துகிறார். குருவிற்கு மூன்று பார்வைகள் உண்டு. அவர் தான் இருக்கும் இடத்தில் இருந்து 5, 7, 9 ஆகிய பாவகங்களை (வீடுகளை) பார்க்கிறார். 5-ம் பார்வை (பூர்வ புண்ணிய பார்வை): குழந்தை பாக்கியம், பூர்வ புண்ணியம், அறிவு மற்றும் குலதெய்வ அருளை மேம்படுத்தும். 7-ம் பார்வை (சமசப்தம பார்வை): திருமணம், கூட்டுத் தொழில்,…
புதிய திட்டங்களைத் தொடங்க உகந்த நாள். முயற்சிகளில் முழு ஆற்றலுடன் செயல்படுவீர்கள். நேர்மறையான அணுகுமுறை மற்றவர்களைக் கவர்ந்திழுக்கும். புதிய முதலீடுகள் மற்றும் கூட்டு முயற்சிகள் லாபத்தைத் தரும். அலுவலகத்தில் திறமை அங்கீகரிக்கப்படும். உயரதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். மாணவர்கள் போட்டித் தேர்வுகளில் சிறந்து விளங்க வாய்ப்புண்டு. அதிர்ஷ்ட எண்: 9 அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
பணியிடத்தில் உங்கள் ஆலோசனைகளுக்கு மதிப்புக் கிடைக்கும். பணம் தொடர்பான விஷயங்களில் சற்று எச்சரிக்கையுடன் செயல்படவும். வீண் செலவுகளைத் தவிர்க்கவும். தொழிலில் கூட்டாளிகளுடன் சுமூகமான பேச்சுவார்த்தைகள் இருக்கும். வியாபார முன்னேற்றம் சீராக இருக்கும். வேலையில் இருந்த சுமை குறையும். மாணவர்கள் புதிய பாடங்களைப் புரிந்து கொள்வதில் ஆர்வம் கூடும். ஆசிரியர்களின் வழிகாட்டுதல் உதவும். அதிர்ஷ்ட எண்: 6 அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
இலக்குகளில் கவனம் செலுத்துவது முக்கியம். தேவையற்ற விவாதங்களைத் தவிர்த்தால், மன அமைதி கிடைக்கும். பழைய வாடிக்கையாளர்களின் ஆதரவு தொழிலுக்கு வலு சேர்க்கும். அலுவலகத்தில் உயரதிகாரிகளின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். சக ஊழியர்களுடன் இணக்கமாகச் செயல்படுவீர்கள். மாணவர்கள் கவனச் சிதறல்களைத் தவிர்த்து, பாடங்களில் முழு கவனத்தைச் செலுத்தவும். அதிர்ஷ்ட எண்: 5 அதிர்ஷ்ட நிறம்: பச்சை
குடும்பத்துடன் நேரத்தைச் செலவிடுவது மனதிற்கு மகிழ்ச்சி தரும். கடின உழைப்புக்கு ஏற்ற பலன்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. தொழில் விரிவாக்கம் செய்ய இது நல்ல நாள். பெரிய திட்டங்களைத் தொடங்கலாம். நீண்ட நாள் எதிர்பார்த்த பதவி உயர்வு அல்லது ஊதிய உயர்வு தொடர்பான நல்ல செய்தி வரலாம். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும், கடினமான பாடங்களைச் சுலபமாக முடிப்பீர்கள். அதிர்ஷ்ட எண்: 2 அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
புதிய முயற்சிகளில் ஈடுபட நல்ல நாள். திட்டமிட்டுச் செயல்படுவது வெற்றியைத் தரும்.தொழிலில் தற்போதை சூழல் அறிந்து புதுமையான உத்திகளைக் கையாள்வது லாபத்தைத் தரும். தலைமைப் பண்பு பணியிடத்தில் வெளிப்படும். சிக்கலான வேலைகளை எளிதில் முடிப்பீர்கள். மாணவர்கள் கல்வி சார்ந்த போட்டிகளில் வெற்றி பெறுவீர்கள், தன்னம்பிக்கை உயரும். அதிர்ஷ்ட எண்: 1 அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
தொழில் வளர்ச்சி திருப்திகரமாக இருக்கும். எதிர்பார்த்த பணவரவு இருக்கும். வியாபாரத்தில் லாபகரமான மாற்றங்கள் ஏற்படும். புதிய தொடர்புகள் நீண்ட கால அடிப்படையில் உதவ வாய்ப்பு உள்ளது. புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும், கடினமான பணிகளைத் திறம்படச் செய்து முடிப்பீர்கள்; சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். மாணவர்களுக்கு கல்விச் சுற்றுலா அல்லது புதிய கற்றல் அனுபவங்கள் மகிழ்ச்சியைத் தரும். அதிர்ஷ்ட எண்: 5 அதிர்ஷ்ட நிறம்: வெளிர் பச்சை
தொழில், வியாபாரத்தில் எதிர்பாராத திடீர் லாபங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. அலுவலகத்தில் குழுப் பணியில் சிறப்பாகச் செயல்படுவீர்கள், பாராட்டுகள் தேடி வரும். தேர்வுகளில் சிறப்பான முன்னேற்றம் காணப்படும். மாணவர்களுக்கு நினைவாற்றல் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக தாமதமாக காத்திருந்த விஷயங்கள் நல்ல முடிவுக்கு வரும். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் ஆதரவு பலம் சேர்க்கும். அதிர்ஷ்ட எண்: 7 அதிர்ஷ்ட நிறம்: நீலம்
