சிங்கம்புணரியில் உள்ள சேவுகப்பெருமாள் அய்யனார் கோயிலில் நடைபெற்ற விநோதத் திருவிழா பக்தர்களை வெகுவாகக் கவர்ந்தது.

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் அய்யனார் கோயிலில் 9ம் நாள் திருவிழாவில் திருத்தேரோட்டம் விமர்சையாக நடைபெற்றது. நான்கு ரத வீதியில் தேர் வலம் வந்து நிலையை அடைந்தது. இந்த பகுதியில் தென்னை விவசாயம் அதிகளவில் உள்ளதால் விவசாயிகள் தங்களது நேர்த்திகடனாக 101, 201, 501, 1001, 2001, 5001 என பக்தர்கள் தேங்காய் உடைத்தும், குழந்தை வரம் வேண்டியவர்கள்,நோய் குணமடைய வேண்டியும், விவசாயம் செழிக்க வேண்டியும் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடனுக்காக காணிக்கையாக ஆயிரக்கணக்கான தேங்காய்களை தேரடிப் பணிகளில் வீசி எரிந்து உடைத்தனர்.

சுமார் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக நடந்த இந்த நிகழ்ச்சியில்   ஆயிரக்கணக்கான தேங்காய்கள் உடைக்கப்பட்டன. 100க்கும் மேற்பட்டோர் தலையில் ஹெல்மெட் அணிந்து கொண்டு தேங்காய்களை சேகரித்தனர். தேங்காய்களை உடைக்கும் சப்தம் சுமார் இரண்டு மணி நேரம் தேரடி படியில் எதிரொலித்தது. இவ்விழாவை காண லண்டன், அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா  உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும், தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு ரசித்தனர்.

Share.
Leave A Reply

Exit mobile version