வேலூரில் ஆடிபெருக்கு தினமான இன்று ஸ்ரீ கங்காபாலாறு ஈஸ்வரருக்கு பஞ்சபூத மஹாயாகம் மற்றும் அபிஷேகம் நடைபெற்றது. பக்தர்கள் தங்கள் கைகளாலேயே சுவாமிக்கு பாலாபிஷேகம் செய்தனர்.
வேலூர்மாவட்டம்,வேலூர் கோட்டையிலுள்ள அகிலாண்டீஸ்வரி சமேத ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் உள்ள ஸ்ரீ கங்கா பாலாறு ஈஸ்வரருக்கு ஆடிபெருக்கு தினமான இன்று 25 ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு பஞ்சபூத மஹா யாகம் நடைபெற்றது.
பூர்னஹதி நடந்து சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு பின்னர் பொதுமக்கள் தங்கள் கைகளாலேயே பாலாபிஷேகம் செய்தனர். அதனைத் தொடர்ந்து, கோபூஜையும், கலசாபிஷேகமும் நடைபெற்றது. மழை பெருகி, நீர் வளம் பெருகவும் தண்ணீர் பஞ்சம் முற்றிலும் நீங்கவும் கூட்டு பிரார்த்தனையுடன் இந்த அபிஷேகம் நடந்தது. இதில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று சுவாமிதரிசனம் செய்தனர்

