Close Menu
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
What's Hot

செவ்வாய் பிள்ளையார் கொழுக்கட்டையின் வரலாறு தெரியுமா? ஔவையாரை பெண்கள் வணங்குவது ஏன்?

திருப்புலிவனம் ஸ்ரீ திரிசூலக் காளியம்மன் கோயில் ஆடி தீ மிதி திருவிழா: திரளான பக்தர்கள் நேர்த்திக்கடன்!

அரக்கோணம் சாணாத்தி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் சாமி தரிசனம்!

Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram YouTube RSS
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
KoilgalKoilgal
Home»ஆலயம் அறிவோம்»ஆயுள் நீட்டிக்கும் அற்புதத் தலம்!
ஆலயம் அறிவோம்

ஆயுள் நீட்டிக்கும் அற்புதத் தலம்!

Editor web1By Editor web1May 11, 2026No Comments2 Mins Read
Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
Follow Us
Facebook X (Twitter) Instagram YouTube
madurai temple
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

மதுரையம்பதி எனப் போற்றப்படும் மதுரை நகரில், தெற்கு மாசி வீதியில் அமைந்துள்ளது தென் திருவாலவாய ஸ்வாமி கோயில். ஆயுளை நீட்டித்து, ஆரோக்கியத்துடன் வாழ்வளிக்கும் சக்தி வாய்ந்த திருத்தலமாக பக்தர்கள் இந்தக் கோயிலைப் போற்றுகின்றனர்.ஸ்தல புராணம்மார்க்கண்டேயரின் உயிரைப் பறிக்க எமதர்மன் பாசக்கயிற்றை வீசியபோது, அது சிவலிங்கத்தின் மீது பட்டது. இதனால் கடும் கோபம் கொண்ட சிவபெருமான், எமதர்மனை சாந்தப்படுத்தும் விதமாக இந்தத் தலத்துக்கு வந்து கடும் தவம் புரிந்தார் என்பது ஸ்தல புராணம். எனவே இங்கு எமதர்மனால் வணங்கி வழிபடப்பட்ட சிவபெருமானை தரிசிப்பதன் மூலம் ஆயுள், ஆரோக்கியம் ஆகியவை பெருகும் என்பது நம்பிக்கை.

மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்த ஆலயத்தில்,
ஸ்வாமி: ஸ்ரீ திருவாலவாயர்
அம்பாள்: ஸ்ரீ மீனாட்சி அம்மன் என்று அருள்பாலிக்கின்றனர். இங்கு ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ முருகப்பெருமான், ஸ்ரீ தட்சிணாமூர்த்தி, ஸ்ரீ துர்கை ஆகியோருக்கும் தனித்தனி சந்நிதிகள் உள்ளன.சிறப்பு வழிபாடுகள்திங்கட்கிழமை விரதம் (சோமவார வழிபாடு):
சிவனுக்கு உகந்த திங்கட்கிழமையில் விரதம் இருப்பது மிகவும் சிறப்பானது.

லட்டு காணிக்கை

தொடர்ந்து 16 திங்கட்கிழமைகள் விரதம் இருந்து, மறுநாள் செவ்வாய்க்கிழமை கோதுமை மாவு, நாட்டுச் சர்க்கரை, நெய் ஆகியவற்றால் தயாரிக்கப்பட்ட 16 லட்டுக்களை நைவேத்தியம் செய்து வழிபட்டால், நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும் என்பது பக்தர்களின் ஐதீகம். இதனால் இந்த லட்டு ஆயுள் பலம் தரும் காணிக்கை என அழைக்கப்படுகிறது.

வெள்ளிக்கிழமை வழிபாடு:
ஸ்ரீ மீனாட்சி அம்மனுக்கும், ஸ்ரீ துர்கை அம்மனுக்கும் பால் மற்றும் மஞ்சள் கலந்து அபிஷேகம் செய்து அர்ச்சனை செய்து மனமுருகி வேண்டினால், திருமணத் தடைகள் நீங்கும் என்பது நம்பிக்கை.

அறுபதாம் மற்றும் எண்பதாம் கல்யாணம்:

திருக்கடையூர் போன்று இங்கும் 60ம் மற்றும் 80ம் திருமணங்கள் (சதாபிஷேகம்) சிறப்பாக நடைபெறுகின்றன. இங்கு வந்து சிவ-பார்வதியை வழிபட்டால் நீண்ட ஆயுள், நோய் நீக்கம் மற்றும் மரண பயம் நீங்கி நிம்மதியான வாழ்க்கை கிடைக்கும் என பக்தர்கள் நம்புகின்றனர்.

தினசரி சிறப்பு வழிபாடு:
தினமும் காலை 7 மணி முதல் 7.15 மணி வரை பால அபிஷேகம் செய்து வில்வ அர்ச்சனை செய்து வேண்டிக் கொண்டால், சகல தோஷங்களும் நீங்கி, சந்தோஷமும் நிம்மதியும் நிறைந்த நீண்ட ஆயுள் கிடைக்கும்.மதுரை செல்லும் பக்தர்கள் கண்டிப்பாக தரிசிக்க வேண்டிய சக்தி வாய்ந்த திருத்தலம் இது. ஆயுள், ஆரோக்கியம், திருமணம், தோஷ நிவர்த்தி என பல்வேறு பிரார்த்தனைகளுக்கு ஏற்ற இடமாக தென் திருவாலவாய ஸ்வாமி கோயில் திகழ்கிறது.

Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
Previous Articleகோரிமேடு அப்பா பைத்தியம் சுவாமிகள் கோயிலில் குருபூசை … கோலாகல கொண்டாட்டம்!
Next Article கடக லக்னம்: கோடீஸ்வர யோகம் தரும் அதிர்ஷ்ட லக்னம்!
Editor web1
  • Website

Related Posts

செவ்வாய் பிள்ளையார் கொழுக்கட்டையின் வரலாறு தெரியுமா? ஔவையாரை பெண்கள் வணங்குவது ஏன்?

July 20, 2026

திருப்புலிவனம் ஸ்ரீ திரிசூலக் காளியம்மன் கோயில் ஆடி தீ மிதி திருவிழா: திரளான பக்தர்கள் நேர்த்திக்கடன்!

July 20, 2026

அரக்கோணம் சாணாத்தி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் சாமி தரிசனம்!

July 20, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Ads
ADS
Latest Posts

செவ்வாய் பிள்ளையார் கொழுக்கட்டையின் வரலாறு தெரியுமா? ஔவையாரை பெண்கள் வணங்குவது ஏன்?

திருப்புலிவனம் ஸ்ரீ திரிசூலக் காளியம்மன் கோயில் ஆடி தீ மிதி திருவிழா: திரளான பக்தர்கள் நேர்த்திக்கடன்!

அரக்கோணம் சாணாத்தி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் சாமி தரிசனம்!

சோளிங்கர்; மகா முனீஸ்வரர் கோவில் மண்டல பூஜை – பால்குடத்துடன் பக்தர்கள் ஊர்வலம்!

தஞ்சை பெரிய கோவிலில் ஆஷாட நவராத்திரி… நவதானிய அலங்காரத்தில் வராஹி தேவி அருள்பாலிப்பு

Trending Posts

July 19, 2026

தஞ்சை பெரிய கோவிலில் ஆஷாட நவராத்திரி… நவதானிய அலங்காரத்தில் வராஹி தேவி அருள்பாலிப்பு

July 19, 2026
Facebook X (Twitter) Instagram YouTube RSS
  • Home
  • About us
  • Privacy Policy
  • Contact us
© 2026 TN Talks.

Type above and press Enter to search. Press Esc to cancel.