Author: Editor TN Talks

மேஷம்: நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த பணம் கைக்கு வரும். சொன்ன சொல்லைக் காப்பாற்ற துடிப்புடன் செயல்படுவீர்கள். பொறுப்புகள், பதவிகள் தேடி வரும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வெளிவட்டாரத்தில் உங்கள் வார்த்தைக்கு மரியாதை கூடும். ரிஷபம்: எதிர்ப்புகள், சவால்களைத் தாண்டி முன்னேறுவீர்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் திட்டமிட்டதை விட அதிகரிக்கும். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். நவீன மின்சாதனங்கள் வாங்குவீர்கள். வெளியூர் பயணத்தால் அனுகூலம் உண்டு. மிதுனம்: எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு கரையும். குடும்பத்தாருடன் விட்டுக்கொடுத்து செல்லுங்கள். வீண் அலைச்சலும் டென்ஷனும் ஏற்படக் கூடும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவுடன் நடந்து கொள்ளுங்கள். பால்ய நண்பரை சந்திப்பீர்கள். கடகம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். உறவினர்களின் வருகையால் வீடு களைகட்டும். வாகனப் பராமரிப்பை மேற்கொள்வீர்கள். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்ல திட்டமிடுவீர்கள். சிம்மம்: கணவன் – மனைவிக்குள் இருந்த ஈகோ பிரச்சினை, வீண் சந்தேகம் விலகும். புது பொறுப்புகளும், பதவிகளும் தேடி வரும். உங்களின் இலக்கை நோக்கி…

Read More

தேர்தல் நெருங்குவதால் புது புது அடிமைகளை பாஜகவினர் தேடிக்கொண்டிருக்கிறார்கள் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார். திமுக பகுத்தறிவு பாசறை அணி மாநில செயலாளர் திருவிடம் என்பவரது படத்திறப்பு நிகழ்ச்சி, திருவாரூர் அருகே உள்ள கலைஞர் கோட்டத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு துணை முதல்வரும், இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு, திருவிடம் உருவப்படத்தை திறந்து வைத்து பேசியதாவது: மறைந்த திருவிடம் மிகச் சிறந்த கொள்கை பற்றாளராக திகழ்ந்தவர். தனிமனித இயக்கமாக விளங்கியவர். அவரைப் போல லட்சக்கணக்கான தொண்டர்களை பெற்றது திமுக. இளைஞர் அணியினரும், கட்சியினரும் ஒவ்வொருவருமே தனி இயக்கமாக செயல்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக பீகார் தேர்தல் வெற்றிக்கு பின்னர் அடுத்தது தமிழ்நாடு என அமித்ஷா தெரிவித்த கருத்துக்கு திருவண்ணாமலையில் நான் பதில் அளித்தபோது ‘வி ஆர் ரெடி டு ஃபைட்’ என தெரிவித்தேன். தேர்தலுக்கு இன்னும் 100 நாட்கள் உள்ளன. ஒவ்வொரு தொண்டர்களும்…

Read More

திமுக கூட்டணியில் 40 தொகுதிகள் கேட்கவும் தங்களுக்கு உரிமை உண்டு என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது. திருச்சியில் அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அக்கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தவெக தலைவர் விஜய், திமுக-வை தீய சக்தி என்று ஒன்றுக்கு பலமுறை கூறுகிறார். அவரது கருத்தை கூட்டணி கட்சி என்கிற முறையிலும், ஒரு பொறுப்பு வாய்ந்த அரசியல் கட்சி என்கிற முறையிலும் நாங்கள் நிராகரிக்கிறோம். சாதி, மத ரீதியில் நாட்டைப் பிளவுபடுத்துகிற, மக்களின் வளமையான வாழ்வை கேள்விக்குறியாக்கும் கருத்தியல் சித்தாந்தங்கள் கொண்டவர்கள் தான் தீய சக்தி. விஜய்யிடம் நல்ல திட்டங்களை, கொள்கைகளை, புதிய சிந்தனைகளை எதிர்பார்த்தோம். ஆனால், அப்படி எதுவுமில்லாதது ஏமாற்றம் அளிக்கிறது. ஜன.5-ல், காலிப் பணியிடங்களை நிரப்பக்கோரி மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் ரயில் நிலையங்கள் முன்பு நடைபெறவிருக்கும் மறியல் போராட்டத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரிக்கிறது. வரும்…

Read More

“நூறு நாள் வேலை திட்டத்தை ஒழிக்க வேண்டும் என்பதே பாஜகவின் குறிக்கோள்” என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்தார். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள கோவை வந்த அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியது: “100 நாள் வேலைத் திட்டத்தை அழித்து, ஒழிக்க வேண்டும் என்பதே பாஜகவின் குறிக்கோளாக உள்ளது. காந்தியின் பெயரை அந்தத் திட்டத்திற்கு இருக்கக் கூடாது என மாற்றி உள்ளனர். அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் காந்தியடிகளை சிறுமைப்படுத்துவதில் குறியாக உள்ளனர். ‘ஹேராம் ஹேராம்’ என்று கூறிய காந்தியின் பெயரை நீக்கிவிட்டு ‘ஜெய் ஶ்ரீராம்’ என பெயர் சூட்டுகின்றனர். 100 நாள் வேலை திட்டத்திற்கு ஒதுக்கிய நிதியை ஆண்டுதோறும் படிப்படியாக குறைத்து வருகின்றனர். 125 நாள் என்று உயர்த்தி நாடகம் ஆடுகின்றனர். இந்த போக்கை வன்மையாக கண்டிக்கிறோம். திமுக தலைமையிலான முற்போக்கு கூட்டணி சார்பில் தமிழ்நாடு முழுவதும் டிசம்பர் 24-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.…

Read More

18.12.2025 | விசுவாவசு 03 மார்கழி | வியாழக்கிழமை திதி: சதுர்த்தசி நாளை அதிகாலை 5 மணி வரை, பிறகு அமாவாசை. நட்சத்திரம்: அனுஷம் இரவு 8.04 வரை, பிறகு கேட்டை. நாமயோகம்: திருதி நாமயோகம் பிற்பகல் 3.01 வரை, பிறகு சூலம். நாமகரணம்: விஷ்டி நாமகரணம் பிற்பகல் 3.48 வரை, பிறகு சகுனி. நல்ல நேரம்: காலை 9-10, பகல் 11-12, மாலை 4-5, இரவு 8-9. யோகம்: சித்தயோகம் இரவு 8.04 வரை சூலம்: தெற்கு, தென்கிழக்கு மதியம் 2 மணி வரை. சந்திராஷ்டமம்: பரணி, கிருத்திகை. சூரிய உதயம்: சென்னையில் காலை 6.24 அஸ்தமனம்: மாலை 5.46 ராகு காலம்: மதியம் 1.30-3.00 எமகண்டம்: காலை 6.00-7.30. குளிகை: காலை 9.00-10.30. நாள்: தேய்பிறை அதிர்ஷ்ட எண்: 5, 7 பரிகாரம்: வெல்லம்

Read More

மேஷம்: தடைப்பட்ட வேலைகளை மாறுபட்ட அணுகுமுறையால் முடித்துக் காட்டுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். விலகியிருந்த உறவினர்கள், நண்பர்கள் தேடி வந்துப் பேசுவார்கள். வேலைக்காகக் காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். ரிஷபம்: எடுத்த வேலையை முடிக்க அதிகம் உழைக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. வெளியூர் பயணங்களின்போது மிகுந்த கவனம் தேவை. அடுத்தவர் விவகாரங்களில் தலையிட வேண்டாம். மிதுனம்: சமூகத்தில் பிரபலமானவர்களின் நட்பு கிடைக்கும். இழுபறியாக இருந்த வழக்கில் வெற்றி பெறுவீர்கள். முக்கிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். அலுவலகத்தில் உயரதிகாரியின் ஆதரவு கிடைக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். கடகம்: உறவினர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். நீண்டகாலமாக இழுபறியாக இருந்த தொகை கைக்கு வரும். பால்ய நண்பர்களைச் சந்திப்பீர்கள். சுபநிகழ்ச்சிகளில் குடும்பத்துடன் கலந்து கொள்வீர்கள். உங்களின் நிர்வாகத்திறன் அதிகரிக்கும். சிம்மம்: பொது விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். மனதில் புத்துணர்ச்சி காணப்படும். விஐபி ஒருவரைச் சந்திப்பீர்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும்.…

Read More

வேத ஜோதிடத்தின் படி ஒருவரின் பிறந்த கிழமையே அவர்களின் ஆளுமை மற்றும் வாழ்க்கையை எடுத்து சொல்லும் என்று சொல்லப்படுகிறது. அப்படி பொதுவாகவே வெள்ளிக்கிழமைகளில் பிறந்தவர்களுக்கு லட்சுமி கடாட்சம் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. எந்த மாதத்திலும், வெள்ளிக்கிழமைகளில் பிறந்தவர்கள் அன்பு, அழகு மற்றும் நல்லிணக்கத்துடன் தொடர்புடைய வீனஸ் கிரகத்தால் ஆளப்படுவதாகக் கூறப்படுகிறது. இந்த கிழமையில் பிறந்தவர்கள் கனிவான மற்றும் கவர்ச்சிகரமான ஆளுமையை கொண்டிருப்பார்கள். நல்லிணக்கத்தை உருவாக்குவதில் மகிழ்ச்சி அடையும் இவர்கள் இயற்கையாக அமைதியையும் படைப்பாற்றலையும் கொண்டிருப்பார்கள். காதல் மற்றும் உணர்ச்சிவசப்பட்ட இவர்களுக்கு காந்த ஆளுமை இருக்கும். வெள்ளிக்கிழமை பிறந்தவர்கள் சமூகத்தன்மை கொண்டவர்கள் மற்றும் நண்பர்கள், குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட அதிகம் விரும்புகிறார்கள். நல்ல நகைச்சுவை உணர்வுடன் மற்றவர்களை சிரிக்க வைக்கும் திறன் கொண்டவராகவும், இரக்கமுள்ளவர்களாகவும், மற்றவர்களின் பார்வைகளைப் புரிந்துகொள்ளும் திறனையும் கொண்டிருப்பார்கள். தொழில்களில், வெள்ளிக்கிழமை பிறந்தவர்கள் லட்சியவாதிகள் மற்றும் கடின உழைப்பாளிகள். படைப்பாற்றல் மற்றும் வளமிக்க இவர்கள், மற்றவர்களை ஊக்குவிக்கும் இயற்கையான தலைவர்கள்.…

Read More

“100 நாள் வேலைத் திட்டத்தை ஒழிக்கும் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும் – சட்டத்தை கொண்டு வந்த ஒன்றிய பாஜக அரசையும், அதற்கு ஒத்து ஊதும் அதிமுகவையும் கண்டித்து தலைநகர் சென்னையிலும், மாநிலத்தில் உள்ள அனைத்து  ஒன்றியங்களிலும் டிச.24 காலை 10.00 மணியளவில் மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.” என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மதச்சார்பற்ற கூட்டணி சார்பில் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தை சிதைத்து, அதன் திட்டப் பணிகளை சீர்குலைத்து, நிதி ஒதுக்கீட்டை குறைப்பது, மாநிலங்களின் நிதிச்சுமையை அதிகரித்து திட்டத்தை முடக்குவது, வேலைநாட்களை குறைப்பது, பயனாளிகளின் எண்ணிக்கையை குறைப்பது, ‘கிராமங்கள் தான் நம் நாட்டின் முதுகெலும்பு’ என்ற  அண்ணல் காந்தியடிகளின் பெயரை நீக்குவது, இந்தியை திணிப்பது என சட்டத்தை திருத்தியும் – நூறு நாள் வேலையையே இனி இல்லாமல் செய்து கிராம மக்களின் வாழ்வாதாரத்தில் அடிக்கத் துடிக்கும் ஒன்றிய பாஜக அரசின் நாசகார சதிச் செயலையும்…

Read More

புரட்சித்தலைவர் எம்ஜிஆரே திமுகவை தீயசக்தி என்றும், மக்கள் விரோத ஏமாற்ற பேர் வழி கட்சி என்றும் அடையாளப்படுத்தினார். இந்த தீயை சக்தியை எதிர்த்து ஜெயலலிதா போரிட்டார் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னை கீழ்ப்பாக்கத்தில் அதிமுக சார்பில் கிறிஸ்துமஸ் பெருவிழா நடைபெற்றது. இதில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு கிறிஸ்துமஸ் கொண்டாடும் மக்களுக்கு பரிசுப்பொருட்களை வழங்கினார். நிகழ்ச்சியில் பேசிய எடப்பாடி பழனிசாமி, “அதிமுக சார்பில் ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களுக்காக உழைக்கும் இயக்கம் அதிமுக. திமுக மக்களுக்கு எதிரான ஆட்சி. கலெக்ஷன், கமிஷன், கரப்ஷன் என்பதுதான் திமுகவின் தாரக மந்திரம். ஒரு சில அரசியல் மேடைகளில் கடவுள் இல்லை என்று பேசுவார்கள். சில மேடைகளில் நாங்கள் இந்துக்களுக்கு எதிரி அல்ல என்று நடிப்பார்கள். சிறுபான்மை பாதுகாவலர்கள் என்று சொல்லிக்கொள்ளும் திமுக, ஆட்சி அதிகாரங்களை கைப்பற்றுவதற்கும், சிறுபான்மை மக்களின் வாக்குகளை தந்திரமாக…

Read More

மேஷம்: (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) கிரகநிலை- சுக ஸ்தானத்தில் குரு(வ) – பஞ்சம ஸ்தானத்தில் கேது – அஷ்டம ஸ்தானத்தில் புதன், சுக்கிரன் – பாக்கிய ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய் – லாப ஸ்தானத்தில் சனி, ராகு என கிரக நிலைகள் உள்ளன. பலன்கள்: இந்த வாரம் நிதானத்தை கடைபிடிப்பது வெற்றிக்கு வழிவகுக்கும். பேச்சில் கோபம் தெரியாவிட்டாலும் அழுத்தம் இருக்கும். சில சிக்கலான பிரச்சனைகளில் சுமுகமான முடிவை காண முற்படுவீர்கள். சூரியன் சஞ்சாரத்தால் மனதடுமாற்றம் அகலும். தொழில் வியாபாரம் நிதானமாக நடக்கும். பணவரத்து எதிர்பார்த்த அளவு இல்லாவிட்டாலும் தேவை பூர்த்தியாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலையில் கவனமாக இருப்பது நல்லது. வேறு வேலைக்கு முயற்சி செய்பவர்கள் சிறிது காலம் தள்ளிப் போடுவது சிறந்தது. குடும்பத்தில் ஏதாவது பிரச்சனை தலை தூக்கலாம். எல்லோரையும் அனுசரித்து செல்வது நன்மை தரும். கணவன், மனைவிக்கு இடையே திடீர் கருத்து வேற்றுமை உண்டாகலாம். உறவினர் வகையில் மனவருத்தம்…

Read More