Close Menu
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
What's Hot

குரு பௌர்ணமி விழா: ராள்ளபாடி ஸ்ரீ சாய்பாபா கோவிலில் பக்தர்கள் பரவசம்

ஆடி பௌர்ணமி : தங்க கருட வாகனத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த யதோத்தகாரி பெருமாள்!

ராணிப்பேட்டை : கன்னியம்மன் கோயிலி குடமுழுக்கு கோலாகலம்..! திரளான பக்தர்கள் பங்கேற்பு..!

Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram YouTube RSS
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
KoilgalKoilgal
Home»Featured»பழனி மலைக்கோயில் வரலாற்று சாதனை!. முதன்முறையாக ரூ.100 கோடியை கடந்த வருவாய்!
Featured

பழனி மலைக்கோயில் வரலாற்று சாதனை!. முதன்முறையாக ரூ.100 கோடியை கடந்த வருவாய்!

Editor web3By Editor web3July 8, 2026No Comments1 Min Read
Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
Follow Us
Facebook X (Twitter) Instagram YouTube
palani murugan 100 crore
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், தனது வருவாய் வரலாற்றில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.

அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு, தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலிருந்தும் தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.

தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், கந்த சஷ்டி போன்ற திருவிழாக் காலங்களிலும், கார்த்திகை, மார்கழி மாதங்களிலும் பக்தர்களின் எண்ணிக்கை லட்சங்களைத் தாண்டுகிறது. இவர்களின் வசதிக்காக மின் இழுவை ரயில், ரோப் கார், விரைவுத் தரிசன டிக்கெட்டுகள், காலபூஜை, பஞ்சாமிர்தம் மற்றும் தங்கரத உலா போன்ற சேவைகளை கோயில் நிர்வாகம் வழங்கி வருகிறது. இவை தவிர, பக்தர்கள் செலுத்தும் உண்டியல் காணிக்கைகள் ஆன்லைன் மற்றும் நேரடி கவுண்ட்டர்கள் மூலம் வசூலிக்கப்படுகின்றன.

இந்து சமய அறநிலையத்துறையின் ‘பசலி ஆண்டு’ (ஜூலை 1 முதல் ஜூன் 30 வரை) கணக்கீட்டின்படி, கடந்த 1435-ஆம் பசலி ஆண்டில் (01 ஜூலை 2025 முதல் 30 ஜூன் 2026 வரை) பழனி மலைக்கோயிலின் மொத்த வருவாய் ரூ.103,24,13,525 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் முதன்முறையாக 100 கோடி ரூபாயைத் தாண்டி கோயில் நிர்வாகம் மாபெரும் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.

கடந்த ஆறு ஆண்டுகளில் கோயிலின் வருவாய் அசுர வேகத்தில் உயர்ந்துள்ளது என்பதை கோயில் நிர்வாகத்தின் புள்ளிவிவரங்கள் உறுதிப்படுத்துகின்றன. அதன்படி, 2020-ல் ரூ.15.28 கோடியாக இருந்த வருவாய், 2021-ல் ரூ.41.97 கோடியாகவும், 2022-ல் ரூ.80.62 கோடியாகவும், 2023-ல் ரூ.86.06 கோடியாகவும், 2024-ல் ரூ.97.32 கோடியாகவும் படிப்படியாக உயர்ந்தது.

இறுதியாக தற்போது 2026-ஆம் ஆண்டில் (1435 பசலி) ரூ.103.24 கோடியை எட்டியுள்ளது. பக்தர்களின் வருகை பல மடங்கு அதிகரித்திருப்பதே இந்த வருவாய் உயர்வுக்கு முக்கியக் காரணமாகும். வசூலிக்கப்படும் இந்தத் தொகை அனைத்தும் கோயிலின் உள்கட்டமைப்பு வசதிகள், பக்தர்களுக்கான அன்னதானம் மற்றும் தூய்மைப் பணிகளுக்காக முழுமையாகப் பயன்படுத்தப்படும் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

murugan temple palani Revenue crosses ₹100 crore for the first time
Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
Previous Articleதிருவண்ணாமலை : ஆனி பிரம்மோற்சவ விழா கோலாகல தொடக்கம்..! கொடியேற்ற விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்பு..!
Next Article பக்தியின் அடையாளமாய் நெற்றில் பூசப்படும் திருநீறு..! ஏன்? எதற்காக? திருநீறு பூசுவதன் சிறப்பு என்ன?
Editor web3
  • Website

Related Posts

குரு பௌர்ணமி விழா: ராள்ளபாடி ஸ்ரீ சாய்பாபா கோவிலில் பக்தர்கள் பரவசம்

July 29, 2026

ஆடி பௌர்ணமி : தங்க கருட வாகனத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த யதோத்தகாரி பெருமாள்!

July 29, 2026

ராணிப்பேட்டை : கன்னியம்மன் கோயிலி குடமுழுக்கு கோலாகலம்..! திரளான பக்தர்கள் பங்கேற்பு..!

July 29, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Ads
ADS
Latest Posts

குரு பௌர்ணமி விழா: ராள்ளபாடி ஸ்ரீ சாய்பாபா கோவிலில் பக்தர்கள் பரவசம்

ஆடி பௌர்ணமி : தங்க கருட வாகனத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த யதோத்தகாரி பெருமாள்!

ராணிப்பேட்டை : கன்னியம்மன் கோயிலி குடமுழுக்கு கோலாகலம்..! திரளான பக்தர்கள் பங்கேற்பு..!

பௌர்ணமி நிலவொளியில் ஒளிர்ந்த திருச்செந்தூர் கடற்கரை..!! பக்தர்கள் தீபம் ஏற்றி வழிபாடு..!!

மதுரை : அழகர்கோவில் ஆடி பெருந்திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்..! ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் பங்கேற்பு..!

Trending Posts

மதுரை : அழகர்கோவில் ஆடி பெருந்திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்..! ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் பங்கேற்பு..!

July 29, 2026

ராணிப்பேட்டை : கன்னியம்மன் கோயிலி குடமுழுக்கு கோலாகலம்..! திரளான பக்தர்கள் பங்கேற்பு..!

July 29, 2026

பௌர்ணமி நிலவொளியில் ஒளிர்ந்த திருச்செந்தூர் கடற்கரை..!! பக்தர்கள் தீபம் ஏற்றி வழிபாடு..!!

July 29, 2026

குரு பௌர்ணமி விழா: ராள்ளபாடி ஸ்ரீ சாய்பாபா கோவிலில் பக்தர்கள் பரவசம்

July 29, 2026

ஆடி பௌர்ணமி : தங்க கருட வாகனத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த யதோத்தகாரி பெருமாள்!

July 29, 2026
Facebook X (Twitter) Instagram YouTube RSS
  • Home
  • About us
  • Privacy Policy
  • Contact us
© 2026 TN Talks.

Type above and press Enter to search. Press Esc to cancel.